விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்' - kalviseithi

Jul 2, 2020

விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்'


'தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு, இப்போதைக்கு இல்லை' என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தொற்று பரவல் குறைந்த பின், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்த பிறகே, இவ்விஷயத்தில் முடிவெடுக்கப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 24ல் முடிவடைந்தன. இந்த தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதினர். கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 24ல், திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அன்று நடந்த தேர்வில் மட்டும், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை.ஆனாலும், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மே, 27ல் துவங்கியது; ஜூன் இரண்டாவது வாரத்தில் விடைத்தாள்கள் திருத்தம் முடிந்தது.

'ரிசல்ட்' தயார்

இதையடுத்து, பாடவாரியாக மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, தேர்வு மையம் வாரியாக, இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்வு முடிவை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகள் துவங்கின. வரும், 6ம் தேதி தேர்வு முடிவை வெளியிடலாம் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில், அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.'மார்ச், 24ம் தேதி தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய பாடங்களுக்கு மட்டும், முடிவுகள் வெளியிடலாம். மற்ற மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களுக்கும் முடிவை அறிவிக்கலாம்' என, தேர்வுத் துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்திருந்தனர். ஆனால்,அதை ஏற்க, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்து விட்டார். விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்' வெளியிடப்படும் என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி

இது தொடர்பாக, ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் அளித்தபேட்டி:'ஆன்லைன்' வகுப்பு குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிபதிகள், துறை ரீதியாக சில விளக்கங்கள் கேட்டுள்ளனர். நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பொறுத்தவரை, சில சிக்கல்கள் உள்ளன. மார்ச், 24ம் தேதி நடந்த பாடத் தேர்வில், 34 ஆயிரத்து, 682 பேர் பங்கேற்கவில்லை. அவர்களில் தற்போது, 718 பேர் மட்டுமே, தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவர்களுக்கு, எப்போது தேர்வு நடத்தலாம் என்பது குறித்து, முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். அதன்பின் தான், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.

திறப்பு எப்போது?

தமிழகத்தில், தற்போதைய கொரோனா பரவல் சூழல், நமக்கு சாதகமாக இல்லை. பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பதை, நம்மால் யோசிக்க இயலாது. இயல்பு நிலை திரும்பிய பின், மருத்துவ குழு, வருவாய் துறை, பள்ளி கல்வித் துறையினர் ஆலோசித்து, முதல்வர் தலைமையிலான கமிட்டியில் முடிவு செய்யப்பட்டு, பள்ளி திறப்பு குறித்து, முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பெற்றோர் அதிருப்தி

பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதிய நிலையில், ஒரு பாடத்தில் மட்டும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக, ஒட்டு மொத்தமாக முடிவு வெளியீட்டை நிறுத்தி வைப்பதா என,பெற்றோரும், ஆசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:

மாணவர்கள் எந்தெந்த பாடங்களுக்கு தேர்வு எழுதியுள்ளார்களோ, அதற்கு மட்டும் முடிவை அறிவிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. முடிவை விரைவாக அறிவித்தால், மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து, அதன் அடிப்படையில், உயர் கல்வியில் சேர்வது குறித்து, முடிவு எடுக்க அவகாசம் கிடைக்கும்.மாறாக, தேர்வு முடிவை தாமதப்படுத்தினால், அவசர அவசரமாக உயர் கல்வி குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

10 comments:

 1. In efficient people. All the other states has successfully conducted the exam and realised the result. Except tamil nadu

  ReplyDelete
  Replies
  1. தமிழ்நாடு முட்டாள் ஆட்சியாளர்களின் கையில் சிக்கி தவிக்கிறது. எடப்பாடிக்கு ஒரு மையிரும் தெரியாது.

   Delete
 2. தேர்வு எழுதாதவர்கள் சொல்லும் காரணம் ஏற்கும்படி இல்லை. பேருந்து இல்லை என்றால் வேறு ஏற்பாட்டில் தேர்வு எழுத வந்திருக்கலாம். இவர்களுக்காக மற்றவர்களின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம். தயவு கூர்ந்து ரிசல்டை வெளியிடுங்கள்.

  ReplyDelete
 3. 2013-ல கஷ்டப்பட்டு படித்துவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கும் எங்களுக்கு 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மைக் முன் தோன்றி விரைவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு நமது கல்வி அமைச்சர் அதன்பிறகு இப்படி பேசியதை மறந்து விட்டு அடுத்த வடையை சுட ஆரம்பித்துவிடுவார். இது இவர் அமைச்சர் ஆனதில் இருந்து தொடர்கதையாகி வருவதை பி.எட் பட்டம், டி.டி.எட் பயிற்சி பெற்ற அனைவரும் அறிவர். இப்போது கொஞ்ச காலமாக இந்த அறிவிப்பு மறைந்திருந்தது. தற்போது ஆரம்பித்துவிட்டார். நாங்களும் நம்பி நம்பி நம்பி நம்பி ஏமாந்து விட்டு தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையே மறந்துவிட்டு இருக்கும்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இன்னும் எத்தனை மாதங்களுக்கு இதே போன்று அறிவித்துக் கொண்டே இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம் வெற்றி பெறுவோமா அல்லது ......

  ReplyDelete
 4. What the hell government is doing ? Almost all the states declared 12th and even 10th results except our state [Tamil Nadu] only 718 students are willing to write then what about others ? Even some have already conducted the postponed exams but our state is just passing the time by saying words...please and kind request to announce the results soon 🙏

  ReplyDelete
 5. Teacher yarum illadha samiyuthula 11 @12 students padika vatchadhu part time teacher but results ku ulatchdhu part time teacher...ippa results thalli poaiduchu... kastam...

  ReplyDelete
 6. i really very sad,because of other state are publish their result ,but tamilnadu none,if you soon release of result it helpful to take higher studies,i hate this process

  ReplyDelete
 7. He is not concerned about the students who hasn't write the exam. They made many colleges as Quarantine centers. If they release the result, students will start to apply for colleges. Where it will automatically make them to vacate the Quarantine
  centres from the colleges. They are getting 5000 rupees per day for Quarantine. How they will give up this money and release the result of 12th standard students. Now 12th standard students age is 16 till they reach 60 they have to wait for their result. Atleast in future don't casty your vote to this foolish people. My suggestion don't put vote at all.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி