நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக வசூலிக்கலாம்: தமிழக அரசு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2020

நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக வசூலிக்கலாம்: தமிழக அரசு உத்தரவு!


நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக  வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மொத்த கல்வி கட்டணத்தில் 70 சதவீதத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக  வசூலிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. நடப்பு கல்வியாண்டுக்கான மொத்த கல்வி கட்டணத்தில் 70 சதவீத தொகையை 3 தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கட்டணத்தை வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, இதுபோன்ற பேரிடர் காலங்களில் கல்வி கட்டணம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தாலும், அதனை முழுமையாக நடைமுறைபடுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டுவர தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரிடர் மேலாண்மை சட்டபடி கொண்டுவரப்பட்ட இந்த அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க தமிழக அரசு எந்தவித எண்ணையும் அறிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது ஏற்கனவே வேறொரு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் சார்பில் தமிழக அரசின் மனு பரிசீலனையில் இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில் 70 சதவீத கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக  வசூலிக்கலாம் என தெரிவித்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை  இரண்டு வார காலத்திற்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

17 comments:

  1. school ku anupura idea ve illa apram ethuku fees kattanum.....onnum problem illa....next year paduchukalaam

    ReplyDelete
    Replies
    1. நாளையிலிருந்து போனை போட்டு தொல்லை செய்வார்களே! !!!!

      Delete
    2. Unga vettuku Anupalama staff ellorium salary ,current bill phone bill &19-20 loan amount
      Iythallam neenga tharingala madam

      Delete
    3. Athukku government school kondu poi serunga.

      Delete
    4. மின்சார கட்டணம் அலைபேசி கட்டணம் வங்கிக்கடன் எல்லாவற்றையும் அடைக்கிற அளவுக்கு சம்பளம் கொடுப்பாங்க என்று நினைக்கிறீர்களா?????2000 ரூபாய்க்கு மேல் கொடுத்தால் உங்கள் அதிர்ஷ்டம்🌺🌺🌺🌺🌺🌺🌺

      Delete
  2. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு 3000 (அ) 4000 கொடுத்துவிட்டு கணக்கு காட்டி விடுவார்கள்

    ReplyDelete
  3. School ku pokama eathuku fees kattanum.entha private schl um teachers ku full salary kodukala.

    ReplyDelete
  4. எத்தனை சதவீத நாட்கள் பள்ளி இயங்கப்போகிறதோ தெரியவில்லை. எத்தனை சதவீத பாடங்கள் நடத்தப்படப் போகிறதோ தெரியவில்லை. எப்போது பள்ளி திறக்கப்படப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் 70 சதவீதம் கல்விக் கட்டணம் கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. முழுப் பணம் கட்டும்போதும் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச சம்பளத்தைக் கூட கொடுத்தது இல்லை 90 சதவீதப் பள்ளிகளில். வேறு வழியின்றி ஆசிரியர் பயிற்சி படித்து விட்டோமே என்று குறைந்த சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளிலும் இந்த அரசால் பணியிடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது(அனைத்து பணியிடங்களிலும்). வேலைவாய்ப்பை பெருக்கினால் படித்தவர்களின் வாழ்வாதாரம் உயரும். ஆனால் இந்த அரசு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பை உருவாக்காமால் பணியிடங்களைக் குறைத்து விட்டது. இனி படித்தவர்களின் கதி? இப்படி தனியார் பள்ளிகளில் குறைந்த பட்ச சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தானா?

    ReplyDelete
  5. நிதிப்பற்றாக்குறை என்கிறார்கள். ஆனால் கோடிக்கணக்கில் சொத்துக்கள் பங்களாக்கள் நம் கண்முன்னால் ஒவ்வொரு ஊரிலும் வாங்கிக் குவிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. ஊடகங்களில் பார்க்கிறோமே. அது மட்டும் எப்படி?

    ReplyDelete
  6. Ippudi pannina enga mathiri part time teachers kuldhagaigala eppudi pvt school seartha mudiyum solunga...

    ReplyDelete
    Replies
    1. Mr part time teacher ippudi pesalama..solunga neega govt scl la evalvu kastam paduringa nu nallavay theriyum bro..neega oru angam nu theriyum bro my frd Anga tha work panararu..
      ...

      Delete
  7. Some schools still pay on time and full amount.and they are taking online class as well to make all in learning even though well aware the efficiency is yet to gain than physical presence class. So not paying will make school further burden and impossible to run at the same time paying fees by parents at this moment is difficult. So govt has to make some method to pay fees on instalment after August end

    ReplyDelete
  8. Ellarumay govt scl la searthuka angiyum nalla coaching tharuvnga ..thiramiyana full time teacher irrukanga...pet ... extra curricular activities niriya irruku lunch facilities irruku...idhu poga part time teacher irrukanga..kuldhiya nalla parthukuvanga..

    ReplyDelete
    Replies
    1. Part-time teacher pathi pesinadhuku thanks..

      Delete
  9. Avanga avanga kashtam avanga avangaluku Itathlu poie yenna comment panna

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி