புதிய கல்வி கொள்கை குறித்து நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி உரை! - kalviseithi

Jul 31, 2020

புதிய கல்வி கொள்கை குறித்து நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி உரை!


நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணிக்கு உரையாற்றுகிறார். கொரோனா நிலவரம், சீனா விவகாரம், ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு, புதிய கல்வி கொள்கை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் நாட்டின் முதன்மையான விஷயங்களை பிரதமர் மோடியே நாட்டு மக்களுக்கு அறிவித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் தொடங்கியது முதல் லாக்டவுன் அமல், நீட்டிப்பு, கட்டுப்பாடுகள், தளர்வுகள் தொடர்பாகவும் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி குறித்தும் பிரதமர் மோடி தமது உரையில் சுட்டிக் காட்டினார். கடந்த மாதம் 30-ந் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார்.

அவரது உரைகளிலேயே மிகச் சிறிய உரையாக அது இருந்தது. மொத்தம் 16 நிமிடங்கள் மட்டுமே மோடி பேசியிருந்தார். இந்த நிலையில் நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது; விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; சீனாவுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. அத்துடன் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இவை குறித்து பிரதமர் மோடி நாளை தமது உரையில் குறிப்பிடலாம். ஏற்கனவே மன்கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் பிரதமர் மோடி உரையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி