புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் விளக்கம். - kalviseithi

Jul 29, 2020

புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் விளக்கம்.


புதிய கல்விக் கொள்கைக்க்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

புதிய கல்விக் கொள்கைக்க்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கல்விக்கொள்கை குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

*கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம்  எந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

* மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடையவே புதிய கல்விக்கொள்கை

* உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.

* முதல் ஆண்டில்  பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.

* 2 ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமலில் இருக்கும்.

* பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை   தொடரலாம்.

*15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.

*எம்.பில் படிப்புகள் நிறுத்தபடுவதாக புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு

*நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும்.

* கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.

*  தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.

* இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும்.


* பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

*கல்வி கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது


* நாட்டின் உற்பத்தி மதிப்பில் 6% சதவீதம் கல்வி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை


* தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விரிவாக்கப்பட்டு சமூக அறிவியல் கள ஆய்வுகளுக்கு அனுமதி


* கல்வித் துறைக்கான புதிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பு தரும்  ,  கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்*அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்  ,  தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கும், இலக்கியப் படைப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கப்படும்

* உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் 2035 க்குள் 50% மொத்த சேர்க்கை இலக்கு நிர்ணயம்

மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே

2 comments:

  1. மாணவர்கள் பள்ளியில் இருந்தால்தான் ஆசிரியர்களுக்கும் வேலை. இங்கு அவர்களை பழித்துக்கொண்டு அவர்களைக் கண்டு வயிறு எரியும் சிலருக்கும் வேலை. இந்த அரசு பணியிடங்களைக் குறைத்துக் கொண்டு தனியார்மயம் என்று சென்றுகொண்டிருக்கிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகளை தனியார் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று வீதிக்கு ஒரு பி.எட் கல்லூரி என்று திறக்கப்பட்டு எப்படி தரமாக நடந்து எவ்வளவு பேரை சொத்துக்களை விற்று பி.எட் படிக்கச்செய்து, பிறகு தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து அதற்கும் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் உருவாகியுள்ள நிலையில் பணம் செலுத்தி படித்து தேர்ச்சி பெற்று தற்போது அந்த சான்றிதழும் காலாவதியாகும் நிலையில் நாம் உள்ளோம். இப்படி எத்தனையோ வகையில் லட்சக்கணக்கான நாம் வேலை வாய்ப்பு பறிபோகியுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளை நம்பியுள்ள நாம் அதனை கொச்சைப் படுத்தாமல் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பை குறைக்கும் அரசாணை சென்ற ஆண்டில் உருவாக்கப்பட்டு அதனை செயல்படுத்தி பணியிடங்கள் குறைத்துள்ளார்கள். அதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். இந்தக் குமுறல் யாரிடமும் இங்கு வெளிப்பட்டதில்லை. மாறாக ஆசிரியர்கள் வெட்டியாக சம்பளம் வாங்குகிறார்கள் என்றுமட்டும் பொங்குகிறார்கள். தகுதித்தேர்வு என்றவுடன் நீ 2013, 2017 என்று சண்டை போடுகிறார்கள். வேறுவழியின்றி அரசின் தவறான தேர்வுமுறையால் வாரத்தில் 3 அரைநாட்கள் என்று வேலை கொடுக்கப்பட்டு மற்ற நாட்களில் என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் மீதும் சண்டை போடுகிறார்கள். முதலில் நமக்கான வழியை அடைத்துக் கொண்டிருக்கிற அரசை நோக்கி நமது வாழ்வாதாரத்திற்கு என்ன வழி என்று கேட்க வேண்டும் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி