வகுப்பு துவங்கியும், அட்மிஷன் இல்லை மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அலட்சியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2020

வகுப்பு துவங்கியும், அட்மிஷன் இல்லை மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அலட்சியம்


மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகித்து, ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், அரசின் இலவச சேர்க்கையை, பள்ளி கல்வித் துறை துவக்காமல் அலட்சியமாக உள்ளதால், 25 சதவீத இடங்கள்காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வழி மற்றும் வீடியோ பாட வகுப்புகள் துவங்கியுள்ளன. பள்ளி கல்வித் துறை சார்பில், கல்வி, 'டிவி' வழியாக, வீடியோ பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, ஆன்லைனில் வகுப்புகளை நடத்துகின்றன. அதேபோல், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில், கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவங்கிவிட்டது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளில் அரசின் சார்பில், இலவச, எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கை வழங்கும் திட்டம், இன்னும் துவங்கப்படவில்லை. ஒவ்வொரு சி.பி.எஸ்.இ., மற்றும் பள்ளி கல்வி பாட திட்ட பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், இலவச சேர்க்கைக்கு ஒதுக்கப்படும்.இந்த இடங்களில் சேர, மாணவர்கள் தயாராக உள்ளனர். ஆனால், இன்னும் விண்ணப்ப பதிவு கூட துவங்கப்படவில்லை. ஏப்ரலில் துவங்க வேண்டிய, இந்த மாணவர் சேர்க்கை பணிகளை துவங்காமல், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனரகம் அலட்சியமாக உள்ளது.

இயக்குனர் கருப்பசாமி தலைமையில் செயல்படும், மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், சில மாதங்களாக, பல்வேறு பணிகளில் அலட்சியமாகவே செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண பிரச்னை குறித்து, உரிய முடிவு எடுக்கவில்லை. அதனால், பள்ளிகள் தரப்பிலும், பெற்றோர் தரப்பிலும் நீதிமன்றம் சென்று, தீர்வை தேடியுள்ளனர். அதேபோல், இலவச மாணவர் சேர்க்கை திட்டத்துக்கான அறிவிப்பையும், அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் செயலர் உரிய ஆலோசனை மேற்கொண்டு, மெட்ரிக் இயக்குனரகத்தில் சுணக்கமான நிலையை மாற்ற வேண்டும் என, பள்ளி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி