இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த, சி.ஏ., தேர்வுகள் ரத்து ! - kalviseithi

Jul 14, 2020

இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த, சி.ஏ., தேர்வுகள் ரத்து !


இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த, சி.ஏ., தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், நவம்பர் மாத தேர்வுடன் சேர்த்து, இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்றும், ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சி.ஏ., எனப்படும் பட்டய கணக்காளர்களுக்கான தேர்வு, ஆண்டுதோறும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மே மாத தேர்வு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்டு, ஜூலை, 29 முதல், ஆகஸ்டு, 16ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, பெற்றோர் சங்கத்தினர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் கான்வில்கர், சஞ்சிவ் கண்ணா அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பட்டய கணக்காளர் நிறுவன தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலால், ஜூலை, 29 முதல், ஆகஸ்டு, 16ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த, சி.ஏ., தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. மே மாத பருவத் தேர்வு, நவம்பர் மாத தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி