கல்லூரி தேர்வுகள் ரத்து - முதல்வர் அறிவிப்பு! - kalviseithi

Jul 23, 2020

கல்லூரி தேர்வுகள் ரத்து - முதல்வர் அறிவிப்பு!செ . கு . எண் : 126

நாள் : 23.07.2020 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 
திரு . எடப்பாடி K. பழனிசாமி 
அவர்களின் அறிக்கை- 23.7.2020 

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள் , பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது .

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது . மாணாக்கர்களின் நலன் கருதி , பல்கலைக்கழக மானியக் குழு ( UGC ) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு ( AICTE ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி , மதிப்பெண்கள் வழங்கி , - முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும் , - முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் , - இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் , அதேபோன்று , எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க நான் உத்தரவிட்டுள்ளேன் . 

இது குறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் .

 K. பழனிசாமி 
தமிழ்நாடு முதலமைச்சர் 

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9

21 comments:

 1. 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பின் மூலமாக
  டெலகிராமில் தனிகுழு ஏற்படுத்தபட்டுள்ளது.
  பாதிக்கபட்ட2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்று பாதிக்கபட்ட ஆசிரியர் நண்பர்கள் மட்டும் இக்குழுவில் சேரவும்

  https://t.me/joinchat/T4Eo3RkaUA_ZtncV0XN-6Q

  ReplyDelete
  Replies
  1. இது போன்ற குழு இல்லை என பதில் வருகிறது

   Delete
  2. Already 2013 batch ku 15000 posting pottacheee. Aparam enna 13 13 nu koovaringa.... Poi Vera velaya paarunga pa.....

   Delete
  3. சரியாக சொன்னீங்க.....10000 பணியிடம் நிரப்பிய பின்னரும் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்..... சந்துல சிந்து பாடும் வேலை இனி ஒரு போதும் நடவாது.... போட்டி தேர்வு எழுதி வா....

   Delete
  4. https://youtu.be/7PoZQAZOWxo

   போட்டித்தேர்வு SYLLABUS ( TRT )

   Delete
  5. 2013,10,000 posting potanga sari.but weightage muraila potanga.ippa weightage go cansel pannitanga.appa avagaluku sollution

   Delete
 2. 3ஆம் ஆண்டு தேர்வு பற்றி‌ சொல்லூங்க ஐயா என்ன மாதிரியான தேர்வு என்று கூறுங்கள் எங்க நிலைமை இப்படி ஆயிடுச்சே மனதிற்கு நிம்மதியான தகவல் கூறுங்கள் படிக்க புத்தகம் தேட ஆரம்பிக்கும்

  ReplyDelete
 3. Kalviseidhi topic related comment pannuga comment parthalay Tet Tet Tet Tet...

  ReplyDelete
 4. Pls tell about finaller exam

  ReplyDelete
 5. Clg students ku exam ila nu soni nga but distance education ku exam ????? Iruka ilaya

  ReplyDelete
 6. தொலைநிலை கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகள் தேர்வு குறித்து எழும் கேள்விகள்.அவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்க உள்ளார்கள்.தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்.

  ReplyDelete
 7. B. Ed padikaravangalukum exam iruka???

  ReplyDelete
 8. M Phil (Math) 1st year Distance education
  Exam உண்டா இல்லையா Pls tell me Kalviseithi

  ReplyDelete
 9. நான் ma 2nd year distance education exam உண்டா

  ReplyDelete
 10. 2013 tet 2 years time irukku dont worry

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி