கல்வி தொலைக்காட்சி காலஅட்டவணை வெளியீடு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள கல்வித் துறை வேண்டுகோள் - kalviseithi

Jul 16, 2020

கல்வி தொலைக்காட்சி காலஅட்டவணை வெளியீடு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள கல்வித் துறை வேண்டுகோள்


கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பித் தலுக்கான காலஅட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளி யிட்டுள்ளது.

கரோனா பாதிப்பால் மாணவர் களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க அரசின் கல்வி தொலைக் காட்சி மூலம் பாடம் பயிற்றுவிக்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் தொடங்கி வைத் தார். தற்போது அதற்குரிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: கல்வி தொலைக் காட்சியில் 8, 9, 10-ம் வகுப்புகளுக் கான பாடங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை 30 நிமிடம் வீதம் தினமும் 2.30 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும். அதன்படி 10-ம் வகுப்புக்கு காலை 8 முதல் 9 மணி வரை தமிழ், ஆங்கிலம் பாடங்களும், 10 முதல் 11 மணி வரை கணிதம், அறிவியல் பாடங்களும், 12 மணிக்கு சமூக அறிவியல் பாடமும் ஒளிபரப்பாகும். அதேபோல், 9-ம் வகுப்புக்கு காலை 9 முதல் 10 மணி வரை தமிழ், ஆங்கிலம் பாடங்களும், 11 முதல் 12 மணி வரை கணிதம், அறிவியல் பாடங்களும், 12.30 மணிக்கு சமூக அறிவியல் பாடமும் பயிற்றுவிக்கப்படும்.

மேலும், 8-ம் வகுப்புக்கான பாடங்கள் மதியம் 1.30 முதல் 4 மணி வரையும், 6-ம் வகுப்புக்கான பாடங்கள் மாலை 4 முதல் 5 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும். மேலும், 2 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாலை 5 முதல் 7 மணி வரை 30 நிமிடம் மட்டும் பாடங்கள் காட்சிப்படுத்தப்படும். மேலும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நீட், ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் தங்களின் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளிக்கல்வியின் 14417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 7-ம் வகுப்புக்குரிய விவரம் அட்டவணையில் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. 7th std time irukku nalla parunka.

    ReplyDelete
  2. Sir please bublish correct news. Because many peoples hope to kalviseithi.

    ReplyDelete
  3. For all class is tamil then english medium students whate they do for study.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி