தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்.? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!! - kalviseithi

Jul 22, 2020

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்.? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!!


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்தும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்தும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது

இந்நிலையில், அடுத்த மாதம் இறுதிக்குள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 27-ஆம் தேதி 12ஆம் வகுப்பு மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறினார்.

மேலும், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்ட பிறகு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

15 comments:

 1. எப்பா..... என்னத்த சொல்ல!!!!!!

  ReplyDelete
 2. Ivaru ta Ean sir kekarenga Ivaruku onnum theriyathu ethunalum cm ta kelunga pa ivara initial ku problem varama pathuka michar kuduthu valatharanga

  ReplyDelete
 3. ஆகஸ்டில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை தேவை

  ReplyDelete
 4. முதல்ல சட்டமன்றம், பொது போக்குவரத்து இதை தொடங்குங்கள் .. பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கலாம்...

  ReplyDelete
 5. School open pannunga pannama ponga but sengottai kita kekathinga avaruku Onnum theriyathu pavam

  ReplyDelete
 6. பொது போக்குவரத்து தொடங்குங்க

  ReplyDelete
 7. தடுப்பூசி கண்டுபிடித்து அது நோயை குணப்படுத்திய பின்னர் பள்ளிகளை திறக்கலாம். அதற்கு முன் திறப்பது அபாயகரமானது.
  இந்த தலைமுறை ‌‌‌‌‌‌படும் பாடே போதும். அடுத்த தலைமுறைக்கு இத்துன்பம் வேண்டாம்.

  ReplyDelete
 8. Dai neyellam oru minister.... poiya sollatha...

  ReplyDelete
 9. Aya vannakam senkotiyan aya..ungaladhu puridhal purikirdhu...kudiya sikarathil all school open panna step edukangala aya..vannakam

  ReplyDelete
 10. பொருத்தார் பூமி ஆள்வார் அடுத்த தலைமுறை அறிவார்ந்த தலைமுறை
  அவர்கள் விசயத்தில் அவசரம் வேண்டாம்.சிந்தித்து செயல்படுவோம்.

  ReplyDelete
 11. பொது போக்குவரத்து தொடங்குங்கள் பின்னர் பள்ளி திறக்கலாம்

  ReplyDelete
 12. முதலில் தடுப்புமருந்து மிக விரைவில் தமிழகத்துக்கு வர வேண்டும் பின்பு பள்ளிகளை திறக்க உத்தரவு கொடுக்கவேண்டும் இல்லை யெனில் நமது குழந்தைகளின கண்கள் மிகவும் பதிப்பு அடையும் காரணம் SMART Class மக்களிடம் கருத்துக்கள் வரும்வரை காத்திருக்காமல் மிக விரைவில் முடிவு எடுங்கள் ஐயா. வணக்கம்

  ReplyDelete
 13. செங்கோட்டையன் ஐயா,,,,சிறப்பாசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 2 வருடம் முடிந்து விட்டது,,,எங்களோடு தேர்வு எழுதியவர்கள் பணி நியமனம் செய்து 8 மாதங்கள் முடிந்து விட்டது,,ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து 4 மாதங்கள் முடிந்து விட்டது,,,,,,,இவை அனைத்தும் மாதங்கள் ஆனது,,,,,,ஆனால் எங்கள் உயிரோ!!இதை எல்லாம் நினைத்து நினைத்து சில நாட்களிளே போகிவிடும் போல ஐயா!!,,,, எங்களுக்கு நல்வழி செய்யுங்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி