பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை! - kalviseithi

Jul 2, 2020

பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை!


புதிய கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 80 சதவீத பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

1 முதல் பிளஸ் 2 வரை உள்ளமாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 1.98 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து80 சதவீத பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன.

முழுஊரடங்கு அமலில் உள்ளசென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு, நிலைமை சீரானதும்ஜூலை 2-ம் வாரத்தில் புத்தகம்அனுப்பப்படும். மேலும், ஆசிரியர்கள் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று புத்தகங்களைவிநியோகிக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், தனியார் பள்ளிகளுக்கான 1.95 கோடி விற்பனை புத்தகங்களும் அந்தந்த மாவட்ட மைய குடோன்களுக்கு அனுப்பப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும், அனைத்துவகுப்புகளுக்கான பாடநூல்கள்பள்ளிக்கல்வி இணையதளத்தில் (tnschools.gov.in/textbooks) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.​மேலும், https://e-learn.tnschools.gov.in/ என்ற அரசு இணையதளத்தில் பாடங்கள் வீடியோ வடிவிலும் பதிவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

3 comments:

 1. 1.புத்தகங்களை உடனே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் ...

  2.syllabus (பாட பகுதிகள்) குறைப்பு பற்றி முறையான தெளிவான guidelines தேவை ...

  3.காலம் கடந்து syllabus குறைப்பு பற்றி தெரிவிப்பது மாணவர் நலன் காக்காது ...

  4.தற்போது இவ்விவரங்களை தெரிவித்தால் மாணவர்கள் வீட்டிலேயே அல்லது தனியார் பள்ளிகள் online இல் பாடம் நடத்த எதுவாக இருக்கும் ...

  5.கல்வி அமைச்சர் இதுகுறித்து முறையாக முடிவு செய்து ,அறிவிக்க வேண்டும் ............

  ReplyDelete
 2. 1.புத்தகங்களை உடனே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் ...

  2.syllabus (பாட பகுதிகள்) குறைப்பு பற்றி முறையான தெளிவான guidelines தேவை ...

  3.காலம் கடந்து syllabus குறைப்பு பற்றி தெரிவிப்பது மாணவர் நலன் காக்காது ...

  4.தற்போது இவ்விவரங்களை தெரிவித்தால் மாணவர்கள் வீட்டிலேயே அல்லது தனியார் பள்ளிகள் online இல் பாடம் நடத்த எதுவாக இருக்கும் ...

  5.கல்வி அமைச்சர் இதுகுறித்து முறையாக முடிவு செய்து ,அறிவிக்க வேண்டும் ............

  ReplyDelete
 3. Lkg ukg வகுப்புகள் நிலைமை சீராகும் வரை நடத்த கூடாது.
  Fees குறைப்பது பற்றி விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி