ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்!


பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் படித்தார்களா, புரிந்ததா என்பது பற்றி கவலையின்றி கட்டணம் வசூலிக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆன்லைன் வகுப்புகளில் வசதி இல்லாத மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் இல்லாததால் அவர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை.

ஸ்மார்ட்போன் வாங்க முடியாததால் தாழ்வு மனப்பான்மை காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது. இந்த நிலையில் ஆன்லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெற்றோர் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், ஆன்லைன் கல்வியால் அவர்கள் மன நலம், உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையில், ஆன்லைன் வகுப்பை கவனிக்க பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவர் ஒருவர் கடலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், ஆன்லைன் வகுப்பை கவனிக்க செல்போன் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார் ஆனால் செல்போன் வாங்கித் தரும் அளவிற்கு தங்களிடம் பணம் இல்லை என பெற்றோர்கள் கூறியதாவது கூறியதாக தெரிகிறது. இதனால் மன விரக்தி அடைந்த அந்த மாணவர் செல்போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியாதது குறித்து கவலை அடைந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர் செல்போன் வாங்கி தராத விரக்தியில் திடீரென தூக்கில் தொங்கி அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

2 comments:

  1. Unnala fees katta mudiyalana enna koondhaluku private school la sekanum, ipo coronala fees katta mudiyalanu scene podura... School mattum fees vangala, maligai kadai karanum saman kuduka kasu kekuran, paal karan kasu kekuran, kaigari kadai karan kasu kekuran, auto karan kasu kekuran, ana vathiyaruku sambalam kuduka fees katta namaku kasu ila, aparam en private school la pasangala sekkanum, govt schools neraya iruke, anga sekkalame. Fees ilama padikalam.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி