ஓய்வு பெறுவோருக்கு இடைக்கால ஓய்வூதியத் திட்டம்! - kalviseithi

Jul 28, 2020

ஓய்வு பெறுவோருக்கு இடைக்கால ஓய்வூதியத் திட்டம்!

கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, நிரந்தரமான ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், இடைக்கால ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


ஊரடங்கு காலத்தில் பணி ஓய்வு பெற்ற பணியாளர் சிலருக்கு வழக்கமான ஓய்வூதியத்திற்கான உத்தரவு கிடைக்கப்பெறாமல் போயிருக்கும் எனவும், இதனால், வழக்கமான நிரந்தரமான ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் இடைக்கால ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பணியாளர் ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஆறு மாதம் வரை தேவைப்பட்டால் ஓராண்டு வரை இடைக்கால பென்ஷன் தொகை தொடரும் என்றும், விருப்ப ஓய்வு பெறும் பணியாளருக்கும் இந்த சலுகை கிடைக்கப் பெறும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இன்றைய தினம்
    தமிழ்மாநில தலைவர் ஜிகே வாசன் அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோருக்காக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்


    https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/2013_27.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி