மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க EMIS வலைதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்ய தலைமையாசிரியர்களுக்கு - CEO உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2020

மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க EMIS வலைதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்ய தலைமையாசிரியர்களுக்கு - CEO உத்தரவு.



அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை ) தலைமையாசிரியர்கள் , தங்கள் பள்ளியில் உள்ள கடைசி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ( 5,8,10,12 ) மற்றும் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மா ற் றுச்சான்றிதழ் கொடுப்பதற் கான அனைத்து விவரங்களையும் EMIS வலைதளத்தில் Students Students TC details வழியாக மாணவர்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

 பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே Save கொடுக்கப்படவேண்டும் . Save கொடுக்கப்பட்ட பிறகு தவறுகள் இருப்பின் திருத்தம் செய்ய இயலாது என்பதை தெரிவிக்கப்படுகிறது . ஆகவே உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் சரியாக இருப்பதை தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே Save கொடுக்கப்படவேண்டும் . மாணவர்களை Common Pool க்கு மாற்றும் பொழுது மாற்றுச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்தகவலை அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் முறையாக தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

  1. மதிப்பிற்குரியவர்களே, வணக்கம்.
    1.அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது செய்ய என்ன வழி. அரசு வழிகாட்டுதல் என்ன?
    2.அரசு அரசு உதவிபெறும் பள்ளிகள் முற்றிலும் பூட்டப்பட்டுள்ளது ஒரு ஆபீஸ் அறையாவது திறந்தால்தானே மாணவர் சேர்க்கை மற்றும் மாற்று சான்றிதழ் பெறமுடியும். அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கு ஒருவர் கூட சேரவில்லை. ஆனால் தனியார் பள்ளிகளில் சேர்வது தடையில்லாமல் தொடர்கிறது அவர்கள் ஒரு அறையாவது திறந்து மற்றும் ஆன்லைன் மூலமாக மாணவர் சேர்க்கை செய்து வருகிறார்கள்.
    3.EMIS பதிவு செய்ய தற்போது அரசு உத்தரவிட்டுள்ளதா ?EMIS பதிவு செய்யலாம் என்றால் மாணவர் சேர்க்கை செய்யலாமா ?அரசு வழிகாட்டுதல் என்ன ?மாற்று சான்றிதழ் யாரிடம் பெறுவது அரசு அரசு உதவிபெறும் பள்ளிகள் பூட்டப்பட்டுள்ளது அரசின் வழிகாட்டுதல் என்ன ?எவ்வாறு பெற்றோர் tc பெறுவது ?
    R. ஜேம்ஸ் பிரபாகரன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி