Flash News : மாநில நல்லாசிரியர் விருது 2020 - நெறிமுறைகள் பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2020

Flash News : மாநில நல்லாசிரியர் விருது 2020 - நெறிமுறைகள் பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியீடு.


முன்னாள் " குடியரசுத் தலைவர் டாக்டர்.இராதாகிருஷ்ணன் " அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் திங்கள் 5 ஆம் நாள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர் தினவிழாவாகக் கொண்டாடப்பட்டு , அவ்விழாவில் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான " டாக்டர் . இராதாகிருஷ்ணன் விருது " வழங்கப்பட்டு வருகின்றது.

2020 ஆம் ஆண்டிற்கான டாக்டர் . இராதாகிருஷ்ணன்விருது வழங்கும் விழா 05.09.2020 அன்று ஆசிரியர் தினவிழாவாக நடைபெற உள்ளது.
 அரசாணையில் தெரிவித்துள்ளவாறு , பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் , சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநில நல்லாசிரியர் விருதிற்குப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நேர்வில் , மாவட்ட அளவில் குழு அமைத்து வருங்காலங்களில் எவ்வித புகார்களுக்கும் , இடமளிக்காவண்ணம் பார்வையில் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி , ஆசிரியர்களைத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து , அவர்களின் விவரங்களையும் மற்றும் கருத்துருக்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியாகப் பூர்த்தி செய்து 14.08.2020 க்குள் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( இடைநிலைக் கல்வி ) அவர்களது பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

State Teachers Award 2020 - Instructions Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி