Flash News : இணை இயக்குனர்கள் மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2020

Flash News : இணை இயக்குனர்கள் மாற்றம்!


தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இணை இயக்குனர்கள் மாற்றம்:

திரு. கோபிதாஸ் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்.

திரு. நரேஷ்  இணை இயக்குனர் தொழிற்கல்வி.

திருமதி. சுகன்யா இணை இயக்குனர் இடைநிலைக்கல்வி.

திருமதி. ஸ்ரீதேவி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்.

1 comment:

  1. *நாள்:28/07/2020.*


    *தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.ஜி.கே.வாசன்.எம்.பி அவர்கள் விடுக்கும் அறிக்கை:*

    *"2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு சான்றிதழுக்கான காலத்தை நீட்டித்து,படிப்படியாக வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் " த.மா.க.கோரிக்கை:*


    *இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 80,000 பேர்கள்,கடந்த ஆறரை ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்திருக்கிறார்கள்.*

    *தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.சாதாரணமாக தேர்வில் தேர்ச்சி என்பது எக்காலத்திற்கும் பொருந்தும்.ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013 ஆம் ஆண்டு தேர்வு பெற்றவர்களுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். தற்போது தேர்வு நடைபெற்று ஆறரை ஆண்டுகள் ஆகியும் பணி வழங்கப்படவில்லை.இன்னும் சில மாதங்களில் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில் இருக்கின்றன.*

    *மத்திய மற்றும் மாநில பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்விற்கு வழங்கப்படக்கூடிய தகுதிச் சான்றிதழ், ஆயுட்காலச் சான்றிதழாக இருக்கின்றது.அதே போல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு காலகட்டத்தை மீட்க முடியுமா?அல்லது நீட்டிக்க முடியுமா? என்று அரசு பரிசீலித்து ஓர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ,வேலை கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்களுக்கு தற்போதைய பாடத்திட்டம் தெரியாது என்று அரசு கருதுமேயானால் அவர்களுக்கு பணி ஆணை வழங்கிய பிறகு,ஒரு குறுகிய கால மறு பயிற்சியை,தற்கால பாடத்திட்டத்தின் படி பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களை பணி செய்ய அனுமதிக்கலாம்.இவற்றை பள்ளிக்கல்வித்துறையும் பரிசீலனை செய்ய வேண்டும்.*
    *ஆகவே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்களுக்கு தகுதிதேர்வு சான்றிதழுக்கான காலத்தை மறுபரிசீலனை செய்து நீட்டித்தும் படிப்படியாக வேலைவாய்ப்பை வழங்கியும் அவர்களது வாழ்வில் ஔிதீபம் ஏற்ற வேண்டும் என்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..*


    *ஜி.கே.வாசன்.*


    *என்றும் நன்றியுடன்*

    *2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*

    *பதிவு எண் 36/2017*

    *வலைதளம்* *https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/2013_27.html*

    *What's app*: https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    *Telegram*: https://t.me/joinchat/TCPK1koneM09fDFyAYPeNw

    *Twitter*
    https://twitter.com/j0NL7MbKzYaOGYD/status/1288125382521020418?s=08

    *Email*
    *velgatamil.247@gmail.com*


    📞 8012776142 & 8778229465

    *YouTube* - *Velgatamil*

    *Facebook* *வெல்கதமிழ்*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி