கணிதத்தை இனிப்பாக்கும் கணிதப் பெட்டகம் ( Math Miss Kit) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2020

கணிதத்தை இனிப்பாக்கும் கணிதப் பெட்டகம் ( Math Miss Kit)


வடவள்ளியில் உள்ள, 'கணிதம் இனிக்கும்' ஆய்வு மையத்தில், மாணவர்கள் கணிதத்தை எளிதாக கற்க உதவும், 'கணித பெட்டகம்' அறிமுகப்படுத்தப்பட்டது.

வடவள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமாதாணு,80. சிறுவயதிலிருந்தே கணிதத்தின் மீது அளப்பரிய ஆர்வம் கொண்டிருப்பவர். ஓய்வு பெற்ற பின்னர், தனது 35 ஆண்டுகால அனுபவங்களை வீணாக்காமல், 'கணிதம் இனிக்கும்' எனும் பெயரில் ஆய்வு மையம் துவங்கி, கணிதம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

பல சிக்கலான கணிதங்களுக்கு, சமன்பாடு இல்லாமலே, எளிய உபகரணங்கள் வாயிலாக, சில வினாடிகளில் தீர்வு காணும் திறன் படைத்தவர். இவரது திறனை பாராட்டி, பல்வேறு மாநிலங்கள், நாட்டு அமைப்புகள் அழைத்து, கவுரவப்படுத்தியுள்ளன.மனிதநேய பேரவை எனும் அமைப்பை உருவாக்கி, சமூக சேவைக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.
கடந்த முதல் தேதி, தனது 81வது பிறந்த நாளையொட்டி, மாணவர்கள் எளிதில் கணிதத்தை கற்க உதவும் வகையில், 'கணித பெட்டகம்' ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடவள்ளியில் உள்ள கணிதம் இனிக்கும் ஆய்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த பெட்டகத்தை அவர் வெளியிட்டார்.
இது குறித்து ஆசிரியர் உமாதாணு கூறியதாவது:

கணிதம் மிக கடினமானது என பலர் கருதுகின்றனர். அது தவறு. கணித சூத்திரங்களை அனைவரும் மனப்பாடம் செய்து பயன்படுத்துவதால், அது கடினமாக தோன்றுகிறது.எனவே, கணித சூத்திரங்களை மனப்பாடம் செய்யாமல் நினைவில் கொள்வதற்காக, பல கட்ட முயற்சிக்கு பின், இந்த கணித பெட்டகத்தை உருவாக்கி உள்ளேன்.
இந்த பெட்டகத்தில், சூத்திரங்களை நினைவில் கொள்ள உதவும் உபகரணங்கள், உயரங்களையும், தூரங்களையும் கணக்கிட உதவும் கிளீனா மீட்டர், எண் கோட்பாட்டின் பயன்பாடுகள், கணிதத்தை இனிதாக கற்க உதவிடும், 'உடனடி உதவிக்கரம்'(Mathmiss Ready Reackoner) உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
ஒவ்வொரு பள்ளியிலும் இந்த 'கிட்' பயன்படுத்தி கற்பித்தால், கணிதத்தை எளிதாக மாணவர்கள் கற்றுக்கொள்வர். மாணவர்களின் நலன் கருதி, தமிழக பள்ளிக்கல்வித்துறை இதற்காக நடவடிக்கை எடுக்க முன்வந்தால் மகிழ்ச்சி.இவ்வாறு, ஆசிரியர் உமாதாணு கூறினார்.

இது குறித்த மேலும் விவரங்கள் அறிய, 93604 82003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி