MCA படிப்புக்காலம் 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு - அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவிப்பு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2020

MCA படிப்புக்காலம் 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு - அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவிப்பு.!


எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணையிட்டுள்ளது. நாடு முழுவதும் எம்சிஏ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல் இளநிலை படிப்பை முடித்து மேலும் 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதாலும் பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை கணினி பயன்பாடுகள் என்ற எம்சிஏ படிப்பில் சேரும் ஆர்வம் பெருமளவில் மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. இதை தவிர்க்கும் வகையிலும் எம்சிஏ படிப்பில் சேரும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமம் ஏஐசிடிஇ புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இணைந்த எம்சிஏ படிப்புக்கான வழிகாட்டுதலில், தற்போதைய நடைமுறையின்படி பிசிஏ படித்தவர்கள் மட்டும் எம்சிஏ படிப்பை 2 ஆண்டுகள் படித்தால் மட்டும் போதுமானது. அதேநேரத்தில் இதர இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் எம்சிஏ படிப்பை 3 ஆண்டுகள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றும் தனது வழிகாட்டுதல் நெறிமுறைகளில் ஏஐசிடிஇ குறிப்பிட்டுள்ளதாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணையிட்டுள்ளது. UGC-ன் 545-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையடுத்து 3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைத்து AICTE அறிவித்துள்ளது. B.Sc., BCA, B.Com., உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சியானவர்கள் நேரடியாக சேரலாம். கடந்த ஆண்டில் MCA படிப்பில் சேர்ந்தவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. பல்கலைக்கழக அனுமதி குழு ஒப்புதலையடுத்து புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டு 2020-21 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி