RTI- திருமணமாகாத அரசு ஊழியர் ஓய்வுபெறுவதற்கு முன் மரணமடைந்தால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2020

RTI- திருமணமாகாத அரசு ஊழியர் ஓய்வுபெறுவதற்கு முன் மரணமடைந்தால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்...


ஏற்கெனவே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு, அரசாணை எண் - 2906, வருவாய்த்துறை, நாள் - 4.11.1981 மற்றும் அரசாணை எண் - 581, வருவாய்த்துறை, நாள் - 3.4.1987 மற்றும் அரசு கடித எண் - 1534, வருவாய்த்துறை, நாள் - 28.11.1991 ஆகியவை மூலமாக கூறியுள்ளது.

தற்போது வாரிசு சான்றிதழ் வழங்குவது கணிணி மயமாக்கப்பட்டு விட்டது. எனவே தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு துறை 9.8.2017 ஆம் தேதியில் புதிதாக வாரிசு சான்றிதழ் வழங்குவது குறித்து ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன் எண் - 11/2017, ந. க. எண் - வ. நி. 5(3)/180/2017 ஆகும்.

இதன்படி வட்டாட்சியர் வழங்கிய வாரிசு சான்றிதழில் ஏதாவது முரண்பாடுகள் ஏற்பட்டு, திருத்தம் செய்ய வேண்டுமென்றால் சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் சம்மந்தப்பட்ட கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும்.

வாரிசு சான்றிதழை மாற்றியமைக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ வேண்டுமென்றால் சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்து கொள்ள வேண்டும்.


2 comments:

  1. Trb special teacher pet exam muduchu 3years achu ithuku oru mudiyu kaalam illaiyaa

    ReplyDelete
  2. Chemistry posting potuvangala illaia

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி