STFI - ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆகஸ்ட்-5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2020

STFI - ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆகஸ்ட்-5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு.



ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆகஸ்ட் 5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு . இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் 21.07.2020 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் தலைமையில் காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு அகில இந்தியத் துணைத்தலைவர் K. ராஜேந்திரன் , அகில இந்தியச் செயலாளர் K.P.0 . சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் S. சேது செல்வம் வரவேற்புரை ஆற்றினார் . கூட்டத்தில் கடந்த 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 6500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதி 17 ( ஆ ) நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆகஸ்ட்-5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம்- இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI)21.07.2020 மாநிலக்குழு முடிவு-ஊடகச் செய்தி மற்றும் தீர்மானங்கள் Pdf வடிவில்
Download here...

1 comment:

  1. Compare the salary of govt teachers and private teachers
    Compare the work of both
    Compare the offer when compare to private teachers.both are handled Hsc but there is drastic variation Due to this pandemic they are all full salaried but what about private teachers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி