UGC அனுமதி பெறாத பல்கலைக்கழகங்கள் 2018 - 2019 பிஎட் மாணவர்களுக்கான கட்டணம் திருப்பி அளிக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2020

UGC அனுமதி பெறாத பல்கலைக்கழகங்கள் 2018 - 2019 பிஎட் மாணவர்களுக்கான கட்டணம் திருப்பி அளிக்குமா?


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

TAMIL NADU OPEN UNIVERSITY

முனைவர் . கு . ரத்னகுமார் பதிவாளர் தேதி : 29.06.2020

அன்பார்ந்த மாணாக்கர்களே ! வணக்கம் . தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 2004 - ஆம் ஆண்டு முதல் இளநிலைக் கல்வியியல் ( B.Ed. ) பட்டப்படிப்பை வழங்கி வருகின்றது . இப்படிப்பினை தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகம் ( NCTE ) அன்று முதல் இன்று வரை அங்கீகரித்துள்ளது.

 இதுவரை சுமார் 12,500 நபர்கள் B.Ed , படிப்பினை முடித்து தமிழ்நாடு முழுவதுமாக ஆசிரியர்களாக பணியில் உள்ளனர் . தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகத்தின் அனுமதியுடன் 2018-19 - ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது . இச்சேர்க்கையின் மூலமாக தாங்கள் B.Ed. சேர்ந்துள்ளீர்கள்.

 B.Ed. படிப்பிற்கு 2017-18 ஆண்டுவரை பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு
( UGC ) அனுமதி பெற வேண்டியதில்லை  ஆனால் 2018-19 - இல் இருந்து UGC- இன் அனுமதியும் பெறவேண்டும் என்று UGC அறிவித்திருந்தது . பல்கலைக்கழகம் , NCTE யின் அனுமதி பெற்றிருந்தமையின் காரணமாகவும் , UGC அனுமதி வேண்டி சமர்பிக்கப்பட்ட நிலையில் UGC யின் அனுமதி பெற்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்புடனும் 2018-19 - ஆம் ஆண்டிற்கான சேர்க்கையை மேற்கொண்டது.

சேர்க்கைக்கான வினாணப்பம் மற்றும் விவரப்படிவத்தில் " Released subject to recognition of the University Grants Commission " என்று குறிப்பிட்டு வழங்கப்பட்டதற்கான காரணம் UGC அனுமதியை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் . இதுவரை பல்கலைக்கழகம் UGC யிடம் அனுமதி பெறவேண்டி பலமுறை முறையீடுகள் செய்துள்ளது.

சேர்க்கைப் பெற்ற மாணாக்கர்கள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்று பல்கலைக்கழகம் மன்றாடியது . 2018-19 - இல் UGC - யின் முன்னனுமதி பெறாமல் B.Ed சேர்க்கை நடைபெற்றுவிட்டமையால் , அச்சேர்க்கையை ரத்து செய்யுமாறு UGC உத்தரவிட்டுள்ளது .

இந்த உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழகம் 2018-19 ஆண்டு சேர்க்கையை மிகுந்த வருத்தத்துடன் ரத்து செய்ய அறிவித்துள்ளது . இதனால் நீங்கள் எந்த அளவிற்கு பாதிப்பிற்குள்ளாவீர்கள் என்று பல்கலைக்கழகம் மனப்பூர்வமாக உணர்கின்றது .

பல்கலைக்கழகம் 2018-19 - ஆம் ஆண்டு B.Ed , சேர்க்கையை தொடர்ந்து நடத்த இயலாததால் இதனின் இழப்பும் அதிகமாக உள்ளது . படிப்பு மையங்கள் மேற்கொண்ட வளாக நிகழ்வுகளுக்கு செலவீனங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது . தங்கள் அனைவருக்கும் சுய கற்றல் பாடப்பொருள்கள் அளிக்கப்பட்டுள்ளது . அத்துடன் , தாங்கள் பயின்ற காலநேரத்தையும் இழந்திருக்கிறீர்கள் என்பதை நன்கு உணர்கின்றது .

இச்சூழலில் , தாங்கள் பல்கலைக்கழக்திற்கு சமர்பித்துள்ள B.Ed. சேர்க்கை , தேர்வு ஆகியவற்றிற்கான தொகையினை தங்களுக்கு அளிக்க பல்கலைக்கழகத்தின் மேன்மைதங்கிய ஆட்சிக்குழு முடிவு செய்துள்ளது . இதனால் , தாங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதியளித்தல் படிவத்தினை பூர்த்தி செய்து எங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் soetnou123@gmail.com மூலமாகவோ அனுப்பிவைப்பதன் மூலம் நீங்கள் செலுத்திய முழு தொகையினை உடனே திரும்பப் பெறலாம் .

மீண்டும் , தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மிகுந்த மன வருத்தத்தினை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது . இதுபோன்ற நிகழ்வுகள் , வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்கமிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவோம் என்று உறுதியையும் தற்பொழுது வழங்குகிறோம் .

இப்படிக்கு ,
பதிவாளர்.




4 comments:

  1. எத்தனை சதவீத நாட்கள் பள்ளி இயங்கப்போகிறதோ தெரியவில்லை. எத்தனை சதவீத பாடங்கள் நடத்தப்படப் போகிறதோ தெரியவில்லை. எப்போது பள்ளி திறக்கப்படப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் 70 சதவீதம் கல்விக் கட்டணம் கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. முழுப் பணம் கட்டும்போதும் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச சம்பளத்தைக் கூட கொடுத்தது இல்லை 90 சதவீதப் பள்ளிகளில். வேறு வழியின்றி ஆசிரியர் பயிற்சி படித்து விட்டோமே என்று குறைந்த சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளிலும் இந்த அரசால் பணியிடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது(அனைத்து பணியிடங்களிலும்). வேலைவாய்ப்பை பெருக்கினால் படித்தவர்களின் வாழ்வாதாரம் உயரும். ஆனால் இந்த அரசு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பை உருவாக்காமால் பணியிடங்களைக் குறைத்து விட்டது. இனி படித்தவர்களின் கதி? இப்படி தனியார் பள்ளிகளில் குறைந்த பட்ச சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தானா? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலரும் தனியார் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் என்ன பிரயோஜனம்?

    ReplyDelete
  2. எத்தனை சதவீத நாட்கள் பள்ளி இயங்கப்போகிறதோ தெரியவில்லை. எத்தனை சதவீத பாடங்கள் நடத்தப்படப் போகிறதோ தெரியவில்லை. எப்போது பள்ளி திறக்கப்படப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் 70 சதவீதம் கல்விக் கட்டணம் கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. முழுப் பணம் கட்டும்போதும் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச சம்பளத்தைக் கூட கொடுத்தது இல்லை 90 சதவீதப் பள்ளிகளில். வேறு வழியின்றி ஆசிரியர் பயிற்சி படித்து விட்டோமே என்று குறைந்த சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளிலும் இந்த அரசால் பணியிடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது(அனைத்து பணியிடங்களிலும்). வேலைவாய்ப்பை பெருக்கினால் படித்தவர்களின் வாழ்வாதாரம் உயரும். ஆனால் இந்த அரசு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பை உருவாக்காமால் பணியிடங்களைக் குறைத்து விட்டது. இனி படித்தவர்களின் கதி? இப்படி தனியார் பள்ளிகளில் குறைந்த பட்ச சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தானா? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலரும் தனியார் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் என்ன பிரயோஜனம்?

    ReplyDelete
  3. நிதிப்பற்றாக்குறை என்கிறார்கள். ஆனால் கோடிக்கணக்கில் சொத்துக்கள் பங்களாக்கள் நம் கண்முன்னால் ஒவ்வொரு ஊரிலும் வாங்கிக் குவிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. ஊடகங்களில் பார்க்கிறோமே. அது மட்டும் எப்படி?

    ReplyDelete
  4. கல்விமுறையை முற்றிலும் மாற்றம் செய்ய வேண்டும்.. வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் கல்விமுறையாக அமைய வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி