10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: பள்ளிகளில் நாளை முதல் விநியோகம் ! - kalviseithi

Aug 16, 2020

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: பள்ளிகளில் நாளை முதல் விநியோகம் !

 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் (ஆக.17) விநியோகம் செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை சரிபார்த்து தயாராக வைத்துக் கொள்ள வேண் டும்.

இதைத்தொடர்ந்து சான்றிதழ்களை நாளை (ஆக.17) முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். அதேபோல், சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின்தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி