காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10-ம் வகுப்பு மாணவர்கள் ஃபெயில்? - kalviseithi

Aug 9, 2020

காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10-ம் வகுப்பு மாணவர்கள் ஃபெயில்?

காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு நடைபெறவிருந்த இருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.


காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்திருந்தனர்.


இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியதாகவும் அதில் காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடவும் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.


இதனால் காலாண்டு. அரையாண்டு தேர்வுக்கு வராத மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலால் தேர்வுக்கு செல்லாத மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி