10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2020

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.


சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலில் மாணவர்கள் நலன் காக்கும் வகையில் கல்வி கற்றுக்கொள்ள பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை எடுத்துச்செல்ல 10 தொலைக்காட்சிகள் நேரம் ஒதுக்கியுள்ளனர் என்றும் அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

மேலும், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாகவும், மிக விரைவில் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், குழு அளிக்கும் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அதுவே, தமிழக அரசின் நிலைப்பாடு எனவும் திட்டவட்டமாக கூறினார்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் தான் வெளியிடப்படும் என்றும், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ம் தேதி முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

5 comments:

  1. 10 results vidurdhula Enna avasaram .. result vandha pinbu scl open panna porungala...first scl open panna enna way nu parunga

    ReplyDelete
  2. Y,, mark base .. grade system is best .... and it is good for all

    ReplyDelete
  3. Ya grade base only correct. Y they are not accepting.

    ReplyDelete
  4. 2019 pg chemistry judgement copy not present this side in kalviseithi & trb boart because kalviseithi,& trb friends totally froud

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி