வீட்டு - பள்ளி திட்டத்திற்கு 297 வீடியோ பாடங்கள் தயார் - பள்ளிக் கல்வித்துறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2020

வீட்டு - பள்ளி திட்டத்திற்கு 297 வீடியோ பாடங்கள் தயார் - பள்ளிக் கல்வித்துறை.


பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் , அனைத்து டிஇஓ - க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

முழு ஊரடங்கின் காரணமாக மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க பள்ளிக்கல்வித்துறையின் வீட்டு - பள்ளி திட்டத்தின்கீழ் பிளஸ் 2 ல் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் லேப்டாப்புக்கு முதல்கட்டமாக 136 காணொளிகள் ' ஹை - டெக் லேப் மூலம் பதிவிறக்கம் செய்துதரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது 2 ம் கட்டமாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , கல்வி தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து தயாரித்த 297 வீடியோ பாடங்கள் தயார்நிலையில் உள்ளது. முதுகலை ஆசிரியர்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தங்கள் பள்ளியில் மேற்கண்ட பாடங்கள் சார்ந்த பிரிவு மாணவர்களை அழைத்து அவர்களின் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்துதர வேண்டும் . ஒரு மணிநேரத்துக்கு 20 மாணவர்கள் என சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் . வீடியோ பாடங்கள் லேப்டாப்பில் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

1 comment:

  1. Sir, There is some difficult to download Veetu palli thitta Video Lessons in HiTech Labs. Kindly simplify the way to get the Video Lessons, so as to enable them to get download. V. Muthukumaran, Chidambaram.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி