அரசுப்பள்ளிகளை இணைத்து ஆன்லைன் வகுப்பு! 90 சதவீத மாணவர்கள் வருகைப்பதிவு. - kalviseithi

Aug 27, 2020

அரசுப்பள்ளிகளை இணைத்து ஆன்லைன் வகுப்பு! 90 சதவீத மாணவர்கள் வருகைப்பதிவு.

தமிழகத்தில் முதன்முறையாக, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு, ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. இம்முயற்சிக்கு, பெற்றோர் மத்தியில் வரவேற்பு உள்ளதால், 90 சதவீத வருகைப்பதிவு மேற்கொள்ளப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்பு கையாளப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசு வழங்கிய லேப்டாப்பில், 'டிஜிட்டல் கன்டென்ட்' பதிவிறக்கி தரப்பட்டுள்ளது.இதோடு, அனைத்து வகுப்புகளுக்கும் பாடப்புத்தகம் வழங்கப்பட்டுள்ளதால், அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள், வாட்ஸ்-அப் குழு உருவாக்கி, மாணவர்களை கண்காணித்து வருகின்றனர்.ஸ்மார்ட் போன் இல்லாத, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை, ஒருங்கிணைப்பதில் சிக்கல் இருப்பதாக, ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.

ஆனாலும் ஆன்லைனில் வெற்றி!

அனைத்து நடைமுறை சிக்கல்களையும் தாண்டி, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தினசரி 4 மணி நேரம், ஆன்லைன் வாயிலாக வகுப்பு கையாளப்படுகிறது.தனியார் பள்ளிகளை போல, ஆசிரியர்கள் பாடத்துக்கான 'லிங்க்' அனுப்பி, மாணவர்களை ஒருங்கிணைத்து, டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியோடு, வகுப்பறை அனுபவத்தை உருவாக்கி வருகின்றனர்.மொத்தம், 40 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 4 ஆயிரம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவதோடு, தேர்வுகள் வாயிலாக கற்றல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.துவக்கத்தில், 25 சதவீத மாணவர்களே பங்கேற்ற இவ்வகுப்புகளில், பல்வேறு தடைகளை தாண்டி, 90 சதவீத மாணவர்கள் வரை, பங்கேற்க செய்துள்ளனர் .

ஆசிரியர்கள்.எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அலுவலர் கீதா கூறியதாவது:தற்போது பிளஸ் 2 படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள், உயர்கல்வி அட்மிஷனில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிடுவர். இதற்காகவே, ஊரடங்கு சமயத்தில் ஆன்லைன் வகுப்புகளில், பங்கேற்க செய்கின்றோம்.இதற்காக, வெப்பெக்ஸ் (webex.com) நிறுவனத்தின், செயலியை பயன்படுத்துகிறோம். 

இதில், ஒருநாளில், 50 நிமிடங்கள் வரை, இணையதள வசதியின்றி ஆன்லைன் வகுப்பில், பங்கேற்கும் சலுகை உள்ளது.இவ்வகுப்பு முறையாக நடப்பதை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்தபடியே, கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதோடு, பள்ளி வாரியாக தினசரி வருகைப்பதிவு மற்றும் ஆசிரியர்கள் வகுப்பு கையாள்வதை உறுதி செய்ய, இரு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால், அதிகபட்சமாக, 90 சதவீத மாணவர்கள் வரை, இவ்வகுப்பில் பங்கேற்கின்றனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான இவ்வகுப்பில், பிற கல்வி மாவட்ட பள்ளிகள், பங்கேற்க விரும்பினால், தலைமையாசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.மொத்தம், 40 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 4 ஆயிரம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவதோடு, தேர்வுகள் வாயிலாக கற்றல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில், 25 சதவீத மாணவர்களே பங்கேற்ற இவ்வகுப்புகளில், பல்வேறு தடைகளை தாண்டி, 90 சதவீத மாணவர்கள் வரை, பங்கேற்க செய்துள்ளனர் ஆசிரியர்கள். சாத்தியமானது எப்படி?

* கணினி ஆசிரியர்கள் வாயிலாக, பாட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு, பாடத்திற்கு 'லிங்க்' உருவாக்குதல், ஆன்லைனில் வகுப்பு கையாள்வது குறித்து, கடந்த ஜூலையில் பயிற்சி வழங்கினோம்.

ஸ்மார்ட் போன் இல்லாத, மாணவர்களின் பட்டியல் திரட்டப்பட்டது. அருகாமையில் உள்ள மாணவர்களுடன் இவர்களை இணைத்ததன் வாயிலாக, 50 சதவீத வருகைப்பதிவு உறுதி செய்யப்பட்டது.* பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களுடன், ஆன்லைன் கூட்டம் நடத்தி, தற்காலிக தேவைக்கு மொபைல்போன் மற்றும் இணையதள சேவை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆசிரியர்களே முன்வந்து, இணையதளத்திற்கான செலவை பகிர்ந்து கொள்கின்றனர் என்கிறார், மாவட்ட கல்வி அலுவலர் கீதா.

6 comments:

 1. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களான அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர்,ஆய்வக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு நியமனம் செய்து அதன் பின்னால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனம் செய்யலாம்
  அப்படியாவது ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கட்டும்

  ReplyDelete
 2. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் செய்ய
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
  கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
  முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
  பணிவழங்க வேண்டும்
  பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
  பெற்றவர்களை நியமித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

  ReplyDelete
 3. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்

 4. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி