Anna University - கல்விக் கட்டணம் செலுத்தாதவர்கள் வகுப்புகளில் பங்கேற்க தடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2020

Anna University - கல்விக் கட்டணம் செலுத்தாதவர்கள் வகுப்புகளில் பங்கேற்க தடை!

வெளிநாடுவாழ் இந்திய மாண வர்கள் முழு கல்விக் கட்டணத்தை செலுத்தாவிட்டால் வகுப்புகளில் பங்கேற்க முடியாது என்று அண்ணா பல்கலை. உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம் பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டடவியல் வடிவமைப்பு கல்வி நிறுவனம் இயங்குகின்றன. இவற்றில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்திய மாண வர்கள் படிக்கின்றனர்.

இதற்கிடையே கரோனா பாதிப் பால் மாணவர்களிடம் கல்விக் கட் டணத்தை தவணை முறையில் வசூலிக்க தமிழக அரசு அறிவுறுத்தி யுள்ளது. ஆனால், வளாக கல்லூரி களில் படிக்கும் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள்  கல்விக் கட்டணத்தை செலுத்தாவிட்டால் வகுப்புகளில் பங்கேற்க முடியாது என்று அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலை.யின் சர்வதேச உறவுகளுக்கான மையத் தின் இயக்குநர் ஜி.நாகராஜன், அனைத்துத் துறை தலைவர்களுக் கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை; வெளிநாடுவாழ் இந்திய மாண வர்களுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டில் இளநிலை படிப்புகளுக்கு ரூ.3.74 முதல் ரூ.5.61 லட்சம் வரையும், முதுநிலை படிப்புக்கு 1.50 லட்சமும், ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி படிப்புக்கு ரூ.3.74 லட்ச மும் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்த கல்விக் கட்டணத்தை மாணவர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக் குள் செலுத்த வேண்டும். அபராதத் தொகையுடன் செப்டம்பர் 14-ம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம். அதன்பின் கல்விக் கட்டணம்  செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் செப்.15-ம் தேதி முதல், பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

அதேபோல் கல்விக் கட்டணம்  செலுத்தியதற்கான ரசீதை ஆசிரியர் கள் சரிபார்த்து பின்பு மாணவர் களை வகுப்புகளில் அனுமதிக்க வேண்டும். செப்டம்பர் 14-ம் தேதிக் குள் கட்டணம் செலுத்தாத மாணவர் களை வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ரத்தான தேர்வு களுக்கும் கட்டணம் வசூலிக்கப் பட்ட நிலையில், இந்த அறிவிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. What about the management seats in Anna Universitu Engineering colleges. Most of the colleges filled their management seats OF First year for rich students who got lower Marks and received full year fees with donation.BUT classes not started.Also the counselling not finished. If higher Marks poor students unable to get the seats, they can't join the good colleges.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி