அலுவலக ஊழியர்களுக்கு ஆசிரியர் பதவி தர எதிர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2020

அலுவலக ஊழியர்களுக்கு ஆசிரியர் பதவி தர எதிர்ப்பு.

பள்ளி கல்வி அலுவலக ஊழியர்களுக்கு, கலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கும் அறிவிப்புக்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


அரசு பள்ளிகளில், ஓவியம், கலை, கைவினை, வேளாண்மை மற்றும் தையல் ஆகிய சிறப்பு பாடப் பிரிவுகளில், கால முறை ஊதியத்தில், ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதேபோல், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பாட ஆசிரியர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர்.


இந்நிலையில், கலை ஆசிரியர் பதவியில், 20 சதவீத இடங்களை, கல்வி துறையின் அலுவலக பணியாளர்களுக்கு ஒதுக்கி, அவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

*இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றனஇந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.* *இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்கத் தலைவர், ராஜ்குமார் கூறியதாவது:

அரசு பள்ளிகளில், பகுதி நேரமாக பணியாற்றும் கலை ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் கோரி, மனு அளித்து வருகின்றனர்.


பல ஆண்டு அனுபவம் உள்ள அவர்களை நிரந்தரம் செய்யவில்லை.மாறாக, நிர்வாக பணியில் உள்ள ஊழியர்களுக்கு, பதவி உயர்வாக, கலை ஆசிரியர் பதவி அளிப்பது ஏற்கக் கூடியது அல்ல. ஏற்கனவே, நிரந்தரம் செய்வதற்காக, 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.


மேலும், பணி நிரந்தரம் செய்ய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, பள்ளிக் கல்வி துறை நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், பள்ளிக் கல்வி பணியாளர்களை மட்டும், போட்டி தேர்வு இல்லாமல் நியமிப்பது, பாரபட்சமான நடவடிக்கை. எனவே, இந்த முடிவை, அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

4 comments:

  1. தாங்கள் மட்டும் தகுதி தேர்வு இல்லாமல் பதவி உயர்வு வாங்கலாமா நாட்டாமையாரே...

    ReplyDelete
    Replies
    1. தகுதி உள்ள பணியாளர்களுக்கே பதவி உயர்வு நண்பா

      Delete
  2. கலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள தகுதியான அமைச்சு பணியாளர்களுக்கு வழங்குவதில் தவ்றில்லை

    ReplyDelete
  3. Indha poramai than ungalai uyarthum rajkumar

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி