தேர்வாகியும் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் கணினி பயிற்றுநர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2020

தேர்வாகியும் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் கணினி பயிற்றுநர்கள்

பள்ளிக் கல்வித் துறையில் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு 6 மாதங்களான நிலையிலும் பணி நியமனத்துக்காக காத்திருக்கின்றனர் 800 - க்கும் மேற்பட்ட கணினி பயிற்றுநர்கள். தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 824 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந் தாண்டு ஜூன் மாதம் போட்டித் தேர்வு நடந்தது.


இதில் தேர்ச்சிப் பெற்று இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் , ஜன.11 ஆம் தேதி , தற்காலிக தேர்வாளர்கள் பட்டியல் வெளியானது. இதில் 697 பேர் மட்டுமே இடம் பெற்றனர். மீதியுள்ள 117 இடங்களுக்கான முடிவு , வழக்குகள் நிலுவையால் நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. 


இதையடுத்து அந்த வழக்குகள் முடியும்போது , நிறுத்திவைக்கப்பட்ட 117 ) இடங்களுக்கும் சேர்த்து , இறுதித் தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் வழக்குகள் குறித்து இது வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து போட்டித் தேர்வில் வெற்றி பெற்றும் , தற்காலிக பட்டியலில் இடம் பிடிக்க முடியாத திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கூறியது : கணினி பயிற்றுநர் நியமனம் தொடர்பான வழக்குகளில் அரசு கவனம் செலுத்தாததால் இன்று வரை இறுதிப்பட்டியல் வெளியிடவில்லை. போட்டித்தேர்வில் தகுதி பெற்ற 824 பேருக்கான முழு பட்டியல் வெளியிடும் பட்சத்தில் மட்டுமே , அனைவருக்கும் நியாயமான முறையில் பணி கிடைக்கும். வழக்குகள் தாமதமாக முடிந்து , 117 இடங்கள் தனியாக நிரப்பப்பட்பால் தர வரிசையில் சிக்கல்களும் , இட ஒதுக்கீட்டில் பல்வேறு குழப்பங்களும் ஏற்படும். ஏற்கெனவே முதுகலை வேதியியல் ஆசிரியர் தேர்வில் இதுபோல இட ஒதுக்கீடு சிக்கல் எழுந்ததால் , அப்போது வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே , தமிழக அரசு காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 824 பேருக்கும் மொத்தமாக , இறுதிப் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் என்றனர்.

13 comments:

  1. Special teacher PET posting podunga

    ReplyDelete
  2. Final list vanthum job ku poga mudiyama irukom special teachers

    ReplyDelete
  3. Ithupola pg trb chemistry 2019 posting irku?

    ReplyDelete
  4. PET exam vachu 3years achu posting podamatikaraga

    ReplyDelete
  5. Kalivisethi admin pet posting pathi news poduga

    ReplyDelete
  6. Posting computer instructor please

    ReplyDelete
  7. Special teacher drawing tailoring tamil medium posting podunga

    ReplyDelete
    Replies
    1. Special teacher drawing posting pottachi sir ungalukku theriyatha

      Delete
    2. Sir special teacher drawing tamil mediumku posting podanga

      Delete
  8. Na onnu kekara tnpsc la exam vaikara vao exam ku nu andha exam la 10 lakh members pass pana varusam varusam ye again exam vaikara 2013 exam ku 20000 posting potutaga adhula ungaluku kedaikala adhukaga 2013 la exam pass pana elarukum posting potutu dha adutha posting podanum nu avasiyam illaye.its eligibility test dha ne 2013 la 90 mark vagi pass pana unaku posting varuma 2017 la 110 vagiruka na avanuku posting varuma gov decision yedukanum onnu idha life time validity nu soina kandipa recruitment panadrapa again exam vachidha posting podanum bank exam pola.

    ReplyDelete
    Replies
    1. Vandhuta neeyalam engAluku advice pandra endha Exam pass pannama summa poai job ku poai irruka pa unnaku enna Exam pathi unnaku enna pa theriyum ...part time teachar heading la Oru comments poduva idhu oru pulapu...

      Delete
  9. Govinda Govinda...namanthan yellorukum😆😆😆

    ReplyDelete
  10. Many of those provisionally selected are jobless today due to deep sleep of the TRB and TN Govt over the past 8 months

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி