அரசு பள்ளியில் இரண்டு குழந்தைகளையும் சேர்த்த அரசு முதுகலை ஆசிரியர் - kalviseithi

Aug 22, 2020

அரசு பள்ளியில் இரண்டு குழந்தைகளையும் சேர்த்த அரசு முதுகலை ஆசிரியர்

 

ஆசிரியரின் பதிவு.

அனைவருக்கும் வணக்கம்,

 கடந்த இரண்டு ஆண்டுகளாக என் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டேன். ஆனால் அரசு வேலை வரும்போது என் குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில், அதுவும் தனியார் பள்ளிக்கூடத்தில் நல்ல கல்வியை, எதிர்காலத்திற்கு அவன் வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு உகந்த பள்ளியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன்பு சிபிஎஸ்சி இல் சேர்த்துவிட்டேன். ஆனால் நான் செய்தது சரியா என்ற குழப்பத்தில் இருந்து கொண்டே இருந்தேன். இடையில் 2 வீடியோ பதிவுகளை நான் கண்டேன், விழிப்புணர்வு அடைந்தேன். நாம் தவறான முடிவை எடுத்து இருக்கிறோம் என்று உணர்ந்தேன். தனியார் பள்ளியில் ஆங்கிலம் தெரிந்து மதிப்பெண் காகவே அவன் வாழ்வான், ஆனால் அரசுப் பள்ளியில் பாட அறிவை கற்றுக்கொண்டு நல்ல மனிதனாக வளர முடியும் என்பதை உணர்ந்தேன். ஆங்கில அறிவு, சிறப்பு வகுப்புக்கு அனுப்பியாவது அவனுக்கு கற்றுத் தந்துவிடலாம். தனியார் பள்ளியில் சேர்ப்பது சரியான முடிவு அல்ல என்பதை உணர்ந்து நான் உடனடியாக என் முடிவை மாற்றிக் கொண்டேன்.  இன்று ( தருமபுரி நகராட்சி நடுநிலைப்பள்ளி - சந்தைப்பேட்டை ) அரசு பள்ளியில் இருவரையும் சேர்த்து விட்டேன் என் மகளையும் மகனையும். 


அரசு விழா ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை நான் அன்று மனதால் உணர முடியவில்லை, காரணம் தனியார் பள்ளி சிறந்தது என்ற மோகத்தில் அடிமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று அந்த அடிமை மனதிலிருந்து விடுபட்டு விட்டேன். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் நீங்களும் சுதந்திரமாக மனதை விழிப்புணர்வோடு முடிவு எடுங்கள். நம்ம அரசு பள்ளியே சிறந்தது என்று உணருங்கள். படிக்காத பாமரன் கூட அரசு பள்ளியை நம்பும்போது படித்த நாம் ஏன் நம்பிக்கை வைக்கக்கூடாது, நம் குழந்தைகளை சரியான பாதையில் நம்மைவிட யார் கொண்டு செல்வார்கள். விழித்துக் கொள்ளுங்கள் தோழர்களே நன்றி

12 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. GHS கடுகுசந்தை, RAMNAD பள்ளியில் ஒரு B.T Assistant மகன்கள் 10,th முடித்துவிட்டு பக்கத்துக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11th சேர்த்துள்ளனர் , ஒருவர் 9th படிக்கிறார்கள்,

  ReplyDelete
 3. My wife government servent..my 3 child study in government school.

  ReplyDelete
 4. எங்கள் பகுதியில் ஒரு ஆசிரியர் தன் 3 பிள்ளைகளையும் தன் பள்ளியிலேயே சேர்த்தார். சங்கத்தார்களும் இதே போல் வாட்ஸ்அப்பில் போட்டோ போட்டு அவரை ஃபேமஸ் ஆக்கினார்கள்.. ஆனால், அந்த ஆசிரியர் முழுநேர குடிமகன் என்பதும், மனைவியின் தாலியை வைத்து சூதாடும் நற்பண்பாளன் என்பதும், வேறு வழியில்லாமல் அந்த தாய் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததும் ஊர் மக்களுக்கு தெரியும்.. எனவே, உண்மை காரணம் தெரியாது யாரையும் புகழ கூடாது.

  ReplyDelete
  Replies
  1. த‌ய‌வு செய்து ஆதார‌ம‌ற்ற‌,எதிர்ம‌றையான‌,
   அர‌சு ப‌ள்ளியில் ப‌டிக்க‌ வைக்கும்
   அர‌சு ஊழிய‌ர்க‌ளைக் க‌ள‌ங்க‌ப்ப‌டுத்தும் வ‌கையான‌ ப‌திவுக‌ளை ப‌திவிட‌ வேண்டாம்..

   Delete
 5. All members are not select that way.
  Most of the parents believe now a days.
  Please understand
  Don't hurt others

  ReplyDelete
 6. Idhuku ippudi na govt job la irruka part time teacher son and daughter kuda govt scl padikaranga

  ReplyDelete
  Replies
  1. Part time teachers not a government teachers....

   Delete
 7. ஐயா அருமையான முடிவு.சில அரசு பள்ளி ஆசிரியரு அவர்கள் மேல் நம்பிக்கை இல்லை.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி