டிவியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் வீடு வீடாக வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2020

டிவியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் வீடு வீடாக வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!


கல்வி, 'டிவி'யில் ஒளிபரப்பாகும் பாடங்களின் கால அட்டவணையை, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.


தமிழகத்தில், கொரோனா பரவுவதால், பள்ளிகளை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், 'ஆன்லைன்' மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்வி, 'டிவி' மற்றும் மற்ற தனியார், 'டிவி'களில் பாடம் நடத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.


இத்திட்டத்தை, ஜூலை, 14ம் தேதி முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்.தமிழகம் முழுதும், மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள, 437 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், கல்வி, 'டிவி' யில் பாடம் நடத்தப்படுவது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் கருதினர்.


இதையடுத்து, அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, கல்வி, 'டிவி'யில் ஒளிபரப்பாகும் பாடங்களின் கால அட்டவணையை கொடுத்து, பாடங்களை கவனிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களின், இந்த நடவடிக்கை, பொதுமக்கள், பெற்றோர் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

1 comment:

  1. கல்வி டிவியில் வருவதெல்லாம் சங்கத்து சிங்காரங்கள் மற்றும் சிங்காரிகள் தான்.. கற்பித்தல் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி