தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2020

தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி மதிப்பெண் வழங்கப்படும் எனவும், உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா நோய் தொற்று காரணமாக உயிர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி,

*முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் பலவகை தொழில்நுட்பப பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும்,

*முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்,

*இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்.

*முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்,

*அதே போன்று எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்,

இந்த பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, அடுத்த கல்வி ஆண்டிற்கு செல்ல நான் உத்தரவிட்டு இருந்தேன். அதன் அடிப்படையில், உயர்கல்வித்துறை விரிவான வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை வெளியிட்டது.

தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.  இது குறித்து விரிவான அரசாணையை வெளியிட உயர்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்,

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் செய்ய
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
    முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
    பணிவழங்க வேண்டும்

    ReplyDelete
  2. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்

  3. எக்ஸாம் பீஸ் கட்டல இப்போ ஏதாச்சும் வழி இருக்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி