வருமான வரி கட்டுபவர்கள் இன் கவனத்திற்கு... - kalviseithi

Aug 19, 2020

வருமான வரி கட்டுபவர்கள் இன் கவனத்திற்கு...


அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை குறித்து வருமான வரிக்கணக்கு தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் ரூ.2௦,௦௦௦க்கு மேல் வரும் ஓட்டல் பில், வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் வரும் மின்கட்டணம், ரூ.1 லட்சத்துக்கு மேல் வாங்கும் நகை போன்ற சிலவற்றை வருமான வரித்துறை கணிக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதனால் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் உயர் மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகளை குறித்து வருமான வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, " அதிக மதிப்பினாலான பணப்பரிவர்த்தனைகள் கட்டயாம் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான வருமான வரிப்படிவத்திலும் மாற்றங்கள் செய்யவில்லை. சிலர் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் உள்ளதாக கணக்கு காண்பித்து கணக்கு தாக்கல் செய்யாமல் ஏமாற்றுகின்றனர்.

இவர்களை கண்டுப்பிடிக்க இது போன்ற அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்வோரது விவரங்கள் உதவுகிறது. அதிக பணப்பரிவர்த்தனை விவரங்களில் வணிக வகுப்பில் விமானத்தில் பயணம் செய்பவர்கள், வெளிநாடு செல்வோர், சொகுசு ஹோட்டலில் தங்குவோர் என பலரின் விவரங்கள் அடங்கும். இதில் சிலர் தானாக முன்வந்து கணக்கு தாக்கல் செய்கின்றனர். இருப்பினும் மூன்றாம் நபர்கள், நிறுவனத்தின் தகவல்கள் வரி ஏய்ப்பு செய்வோரை கண்டறிய உதவுகிறது" என கூறியுள்ளார்.

1 comment:

  1. திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியப் பெருமக்களே!
    தொடர்ந்து களம் கண்டு வரும் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தோடு இணைந்து களம் காண விரும்புகிறீர்களா?

    கீழ்கண்ட வாட்ஸ்அப்லிங்கில் இணையுங்கள்

    https://chat.whatsapp.com/EJI3H9oMrmWI3uhVlV0SHs

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி