அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு - தமிழக அரசு - kalviseithi

Aug 12, 2020

அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு - தமிழக அரசு

அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வரும் 31 ஆம் தேதி வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்களித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கபட்டுள்ளது.


படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தினாலும், தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்துக்கு தடை நீடித்து வருகிறது. போக்குவரத்து வசதி இல்லாததால், மாற்றுத்திறனாளிகளுடைய உடல் குறைப்பாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு , அவர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்களிக்க மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கோரிக்கை விடுத்தார்.


கோரிக்கையை பரிசீலித்த அரசு, ஏற்கனவே ஜூலை 31 ஆம் தேதி வரை மாற்றுதிறனாளிகள் பணிக்கு வருவதில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டது.


தற்போது தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 1 முதல் 31 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதில் இருந்து விலக்களித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி