பட்டதாரி இளைஞர்களே!! மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! - kalviseithi

Aug 22, 2020

பட்டதாரி இளைஞர்களே!! மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசுத் துறையின் ராணுவ காவல் துறையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் யூபிஎஸ்சி எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 209 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)


மேலாண்மை : மத்திய அரசு


துறை : ராணுவ காவல் துறை


பணி : அசிஸ்டன்ட் கமாண்டன்ட்


மொத்த காலிப் பணியிடங்கள் : 209


கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு :


அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.


ஊதியம் : ரூ.30,000 மாதம்


அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.


இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://upsconline.nic.in/mainmenu2.php என்ற இணையதளம் மூலம் 07.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsconline.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி