தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளில் மாணவ , மாணவியர் சேர்க்கை குறித்து பத்திரிக்கை செய்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2020

தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளில் மாணவ , மாணவியர் சேர்க்கை குறித்து பத்திரிக்கை செய்தி!

 

மத்திய அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில் , இது தொடர்பாக மாண்புமிகு அம்மாவின் அரசு “ வருமுன் காப்போம் ” என்ற முதுமொழிக்கு ஏற்ப பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 


அனைத்து வகை பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் மாணவ , மாணவியர் சேர்க்கை குறித்து கீழ்க்காணும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. 


2020-21ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அனைத்து வகை பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு , 6 ஆம் வகுப்பு மற்றும் 9 - ஆம் வகுப்புகளில் 17.8.2020 திங்கட்கிழமை அன்று முதல் நடைபெறும் சமூக இடைவெளி பின்பற்றுவது சார்ந்து தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசின் வழிகாட்டுதல்கள் மாணவர் சேர்க்கையின் போது தவறாது பின்பற்றப்பட வேண்டும். 


ஒரு பள்ளியிலிருந்து வேறொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளில் ( 2 ம் வகுப்பு -10 ம் வகுப்பு ) சேரும் மாணவர்களுக்கான சேர்க்கையும் 17.08.2020 அன்று முதல் நடைபெறும்.


அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 24.8.2020 திங்கட்கிழமை அன்று முதல் நடைபெறும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள் / நோட்டுப் புத்தகங்கள் உரிய பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு முறைகளை பின்பற்றி வழங்கப்படும்.


இலவச கட்டாயக் கல்விச் உரிமைச் சட்டம் , 2009 - ன்படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. / ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை செய்திட இணை தளத்தின் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பம் செய்திட மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.



1 comment:

  1. உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி