அரசு மேனிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - kalviseithi

Aug 13, 2020

அரசு மேனிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

 மேனிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மேனிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின் படி 2020-2021ம் கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் செயல்படும் அனைத்துவகைப் பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது பொதுப்பிரிவுக்கு 31 சதவீதம், பழங்குடியினர் 1 சதவீதம், ஆதி திராவிடர் பிரிவில் 18 சதவீதம்( ஆதிதிராவிட அருந்ததியினர் இருந்தால் 18 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்), 


மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 20 சதவீதம், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் 3.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 26.5 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும். இதன்படி, பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இடத்துக்கான பட்டியல் முதலில் தயாரிக்க வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கவும், பொதுப்பிரிவினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர்,பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற எந்தவித பாகுபாடின்றி தயாரிக்க அறிவுறுதப்படுகிறது. அதன் பிறகு அந்தந்த பிரிவினருக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும்.  மேற்குறிப்பிட்ட அனைத்து வகைப் பள்ளிகளிலும் பாடப் பிரிவு வாரியாக(Group-Wise) இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி