ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2020

ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி?


கொரோனா தாக்கத்திற்கு பிறகு பெரிதாக பாதிக்கப் பட்டிருப்பது கல்வித்துறை மட்டுமே என்றால் மிகையாகாது . இக்காலத்தில் ஆசிரியர்கள் பணியாற்றிட தயாராக இருந்தாலும் கொரோனாவின் காரணமாக அவர்களால் பள்ளியை நோக்கி செல்ல முடியவில்லை என்பதும் , மாணவர்களால் பள்ளிக்கு வர முடியவில்லை என்பதுமே உண்மை . இந்த நிலையில்தான் மாணவர்களின் கல்வி நலன் பாதித்திடக்கூடாது என்பதற்காக ஆன் லைன் வழியாக மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது .

இப்போதுள்ள சூழலில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது என்பது நிச்சயமாக இயவாத காரியமே , கொரோவின் பரவல் எப்போது நிற்குமோ , அல்லது , கொரோனாவிற்கு எப்போது மருந்து கிடைக்குமோ அப்போது தான் மீண்டும் வழக்கம்போல் பள்ளிகள் இயங்க முடியும் , அதுவரை நிச்சயமாக பள்ளிகளில் கூட்டமாக இருந்து எந்தவொரு பணியையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வாய்ப்பில்லை என்பதே எதார்த்தம் . 

இந்த நிலையில் , மாணவர்களின் நலனுக்காக ஆன் லைன் வழியாக கல்வியை பயிற்றுக்கவோ அல்லது தொலைக்காட்சி வழியாக பயிற்றுவிக்கவோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஆசிரியர்கள் போதும் , இந்த நிலையில் , கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஆசிரியர்கள் பணிக்கு செல்வதற்கு தயாராக இருந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையே உள்ளது . கொரோனா வந்தவுடன் பல ஆசிரியர்கள் தங்கள் உயிருக்கு பயந்து சொந்த ஊர்களுக்குச் சென்று அங்கிருந்து அசைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . 

உண்மையான நிலை இப்படி இருக்கும்போது ஆசிரியர்கள் பற்றி சமீப காலமாக ஒரு சிலர் தவறான விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர் , வேலைக்கு செல்லாமல் வீட்டில் அமர்ந்து சம்பளம் வாங்குவதாக . உண்மை என்னவென்றால் ஆசிரியர்கள் வேலைக்குச்செல்ல தயாராக இருந்தும் பள்ளியை திறக்க வாய்ப்பில்லை என்பதேயாகும் . இந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றி அரசு ஒரு பரிசீலனை செய்ய வேண்டும் . மற்ற துறைகளில் உள்ளதுபோல் வீட்டில் இருந்து பணியாற்றும் நிலை , கல்வித்துறைக்கு சாத்தியப்படாது என்பதை அனைவரும் அறிந்துள்ள நிலையில் ... 

முதலில் ஆசிரியர்கள் அனைவரும் தற்போது எங்கே , எந்த மாவட்டத்தில் இருக்கின்றனர் என்பதைக் கண்டறிய வேண்டும் . இரண்டாவது , இவர்களைப் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் மாற்றுப் பணி வழங்கி பணியாற்ற வைக்க சட்ட ரீதியான முடிவுகள் மேற்கொள்ள வேண்டும் . மூன்றாவது , இவர்கள் உள்ள இடத்திற்கு அருகிலேயே பணி மாற்றம் செய்து அரசு பணிகளை மேற்கொள்ள வைக்கலாம் . தற்போதுள்ள சூழலில் ஆன் லைன் வகுப்புகளும் தொலைக்காட்சி வகுப்புகளுமே போதும் என்பதால் , பள்ளிக்கு செல்ல இயலாத நிலை
யில் உள்ள ஆசிரியர்களுக்கு அரசின் பிற துறைகளில் பணி வழங்குவது மட்டுமே இப்போதுள்ள சூழலில் சரியான தீர்வாக இருக்கும் , ஆசிரியர்கள் பற்றி குறை கூறுவோருக்கும் பதிலடி கூறுவதாக இருக்கும் . 

22 comments:

  1. We are ready to serve any time at any position...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் சார்

      Delete
    2. அர‌சு ச‌மூக‌ அக்க‌றை கொண்ட‌ நியாய‌மான‌ இந்த‌ கோரிக்கையை ப‌ரிசீலித்தால் ஆசிரிய‌ர்க‌ளை தொட‌ர்ந்து வ‌சைபாடிக் கொண்டிருக்கும் வ‌யிற்றெரிச்ச‌ல் பேர்வ‌ழிக‌ளிட‌மிருந்து அவ‌ர்க‌ளைக் காப்பாற்றிய‌ பெருமை வ‌ந்து சேரும்...
      அர‌சின் மீதான‌ ம‌க்க‌ளின் கோப‌மும் ஓர‌ள‌வு த‌ணியும்...
      மேலும் ப‌ள்ளிக் க‌ல்வித்துறையில் கூடுத‌லான‌ ஆசிரிய‌ர் ப‌ணியிட‌ங்க‌ளையும் விருப்ப‌முள்ள‌ ஆசிரிய‌ர்க‌ளைக் கொண்டு பிற‌ துறைக்கு மாற்றினால் அர‌சின் நிதிச்சுமை குறையும்..அர‌சின் ப‌ணிக‌ளும் விரைவாக‌ ந‌ட‌க்கும்..
      உப‌ரியான‌ ஆசிரிய‌ர் ப‌ணியிட‌ங்க‌ளும் பிற‌ துறைக‌ளில் உள்ள‌ காலிப் ப‌ணியிட‌ங்க‌ளும் ச‌ம‌ன் செய்ய‌ப்ப‌டும்..செய்வார்க‌ளா?..

      Delete
  2. மிக சரியான முடிவு ....வரவேற்க தக்கது ....

    ReplyDelete
  3. Correct suggestion

    ReplyDelete
  4. சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி கொரனோக்கான வேலையாது கொடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Kalvisethi newsla special teacher pet news podamattikiraga.apparam eppadi government theriyum

      Delete
  5. Corporation la job kudunga local la.

    ReplyDelete
  6. Alternative job may be given to the teachers until the Covid 19 is eradicated.

    ReplyDelete
  7. சரியான முடிவு ....வரவேற்க தக்கது ..

    ReplyDelete
  8. சரியான முடிவு ....வரவேற்க தக்கது ..

    ReplyDelete
  9. விருப்பம் இருக்கிற teacher க்கு மாற்று துறையில் வேலை கொடுத்தால் surplus என்ற பேச்சு இருக்காது. ....

    ReplyDelete
    Replies
    1. அர‌சு ச‌மூக‌ அக்க‌றை கொண்ட‌ நியாய‌மான‌ இந்த‌ கோரிக்கையை ப‌ரிசீலித்தால் ஆசிரிய‌ர்க‌ளை தொட‌ர்ந்து வ‌சைபாடிக் கொண்டிருக்கும் வ‌யிற்றெரிச்ச‌ல் பேர்வ‌ழிக‌ளிட‌மிருந்து அவ‌ர்க‌ளைக் காப்பாற்றிய‌ பெருமை வ‌ந்து சேரும்...
      அர‌சின் மீதான‌ ம‌க்க‌ளின் கோப‌மும் ஓர‌ள‌வு த‌ணியும்...
      மேலும் ப‌ள்ளிக் க‌ல்வித்துறையில் கூடுத‌லான‌ ஆசிரிய‌ர் ப‌ணியிட‌ங்க‌ளையும் விருப்ப‌முள்ள‌ ஆசிரிய‌ர்க‌ளைக் கொண்டு பிற‌ துறைக்கு மாற்றினால் அர‌சின் நிதிச்சுமை குறையும்..அர‌சின் ப‌ணிக‌ளும் விரைவாக‌ ந‌ட‌க்கும்..
      உப‌ரியான‌ ஆசிரிய‌ர் ப‌ணியிட‌ங்க‌ளும் பிற‌ துறைக‌ளில் உள்ள‌ காலிப் ப‌ணியிட‌ங்க‌ளும் ச‌ம‌ன் செய்ய‌ப்ப‌டும்..செய்வார்க‌ளா?..

      Delete
  10. அர‌சு ச‌மூக‌ அக்க‌றை கொண்ட‌ நியாய‌மான‌ இந்த‌ கோரிக்கையை ப‌ரிசீலித்தால் ஆசிரிய‌ர்க‌ளை தொட‌ர்ந்து வ‌சைபாடிக் கொண்டிருக்கும் வ‌யிற்றெரிச்ச‌ல் பேர்வ‌ழிக‌ளிட‌மிருந்து அவ‌ர்க‌ளைக் காப்பாற்றிய‌ பெருமை வ‌ந்து சேரும்...
    அர‌சின் மீதான‌ ம‌க்க‌ளின் கோப‌மும் ஓர‌ள‌வு த‌ணியும்...
    மேலும் ப‌ள்ளிக் க‌ல்வித்துறையில் கூடுத‌லான‌ ஆசிரிய‌ர் ப‌ணியிட‌ங்க‌ளையும் விருப்ப‌முள்ள‌ ஆசிரிய‌ர்க‌ளைக் கொண்டு பிற‌ துறைக்கு மாற்றினால் அர‌சின் நிதிச்சுமை குறையும்..அர‌சின் ப‌ணிக‌ளும் விரைவாக‌ ந‌ட‌க்கும்..
    உப‌ரியான‌ ஆசிரிய‌ர் ப‌ணியிட‌ங்க‌ளும் பிற‌ துறைக‌ளில் உள்ள‌ காலிப் ப‌ணியிட‌ங்க‌ளும் ச‌ம‌ன் செய்ய‌ப்ப‌டும்..செய்வார்க‌ளா?..

    ReplyDelete
  11. Good suggestion. Ready to serve as driver in transport department.

    ReplyDelete
  12. Government job ku Selection list la ullavangaluku posting potu corana duty yavathu kudunga,,,,,pathi per ku posting potu meetham ullavargaluku podamal irupathu romba kashtam,, entha thappum seiiyamal thandanai anbavipathu pola iruku,,,, please PG TRB(chemistry),,,,SPECIAL TEACHER(PHYSICAL EDUCATION ),,,,,ivangaluku help pannunga,,,,ellarum nalla mark eduthu irukanga,,,,,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி