கரோனா காலத்திலும் மே மாத ஊதியம் இல்லை , முதல்வர் கருணைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2020

கரோனா காலத்திலும் மே மாத ஊதியம் இல்லை , முதல்வர் கருணைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்:

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சகம்,  அனைவருக்கும் கல்வி இயக்கம் SSA மூலம் 

இலவச கட்டாய கல்வியை மாணவர்களுக்கு  வழங்கி வருகிறது.

இதற்காக பாடத்திட்டத்துடன் கல்விஇணைச்செயல்பாடுகளான உடற்கல்வி ஓவியம்  மற்றும் தொழிற்கல்வி(தையல், இசை, கணினிஅறிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி )  பாடங்களை போதிக்க பகுதிநேர ஆசிரியர்களை மாநில அரசுகள் நியமித்துகொள்ள நிதிஒதுக்கி ஒப்புதல் அளித்தது. 

இதன்படி இத்திட்ட வேலையில் தமிழகத்தில்  ஜெயலலிதா தலைமையிலான அரசு 2011 - 12ம்  கல்வியாண்டில் ஆண்டொன்றிற்கு 99 கோடியே 29 லட்சம் நிதிஒதுக்கி 16549 பகுதிநேர ஆசிரியர்களை 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்தது.

இவர்களுக்கு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2014ம் ஆண்டு 2000 ரூபாய் முதல்முறையாக ஊதியம்உயர்த்தி 7000 ரூபாயாக  வழங்கப்பட்டது.

அவரது மறைவிற்கு பின்னர் முதல்வரான எடப்பாடி பழனிசாமி 2017ம் ஆண்டு 700 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கினார்.

இதனால் சம்பளம் 7700 ரூபாய் ஆனது. 

இன்னும் இந்த 7700 ரூபாய் தொகுப்பூதியதோடு  விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாமல் வறுமையில் தவிக்கின்றனர்.

இதோடு சம்பளம் அதிகரிக்க தமிழகஅரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆரம்பம் முதலே ஒவ்வொரு வருடமும் மே மாதம் சம்பளம் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இதனால் ஒவ்வொருவரும் 61000 ரூபாய் சம்பளத்தை இழந்துள்ளனர். 

16549 பகுதிநேர ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 5000 காலி இடங்கள் ஏற்பட்டும், அரசாணைப்படி அந்த இடங்களில் கூடுதலாக யாரையும் பணியமர்த்தவும் இல்லை. 

அப்பணியிடங்களுக்கு  ஒதுக்கப்படும்  நிதியும் சம்பள உயர்விற்காக பகிர்ந்து அளிக்கப்படவில்லை.

7வது ஊதியகுழு 30 சதவீத உயர்வும் கிடைக்க செய்யவில்லை.

அனைவருக்கும் கிடைக்கும் போனஸ் ஒருமுறைகூட வழங்கவில்லை.
மகப்பேறு விடுப்பும் வழங்கவில்லை.

இதனால் அரசு பள்ளியில் வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைய வேண்டிய பகுதி நேர ஆசிரியர்கள் அதற்குப் பதிலாக இந்த 10 ஆண்டுகளில்  
கவலை அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நம்மிடம் பேசுகையில், “கரோனா பொதுமுடக்கம் காரணமாக அரசே பள்ளிகளை மூடி வைத்திருக்கிறது.

பொதுமுடக்கக் காலத்திற்கான ஊதியத்தைக் எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

ஆனால், மத்தியஅரசின் சமக்ர சிக்சா  திட்டவேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள்  விஷயத்தில் இந்த உத்தரவைத் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை.

பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் வெறும் 7,700 ரூபாயைத்தான் தொகுப்பூதியமாகப் பெறுகிறார்கள். 

இந்த நிலையில், கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் போதும்கூட மே மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை இன்னும் ஏற்கப்படவே இல்லை. 

இதுகுறித்து முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

எங்களுக்கு பெரும் சோதனையாக இருக்கும்   மே மாத ஊதியத்தை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு :
சி. செந்தில்குமார் 
மாநில ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு 
செல் 9487257203

28 comments:

  1. Itthudan comedy seithigal mudidhadhu

    ReplyDelete
    Replies
    1. Ennada innum comedy news podala nu wait pannina pora paru Part time teachar pathi semmma....adhu sari may month ivanga enna work panninga...

      Delete
    2. Ungaluku Ellam PTT comedy a theriydhu sari vidunga

      Delete
  2. பகுதி நேர ஆசிரியர்களுக்கு எந்த கல்வி ஆண்டிலும் மே மாதம் ஊதியம் விதிகளின் படி கிடையாது என்று பகுதி நேர ஆசிரியர்களுக்கு நன்றாக தெரியும்..

    கொரோணா காரணம் காட்டி இந்த ஆண்டு மே மாதம் ஊதியம் பெற்றுக் கொள்ளலாம் அதை காரணம் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணி நிரந்தரம் பெறலாம் என்று பகுதி நேர ஆசிரியர்கள் நினைத்தனர்...

    போலி தகுதி இல்லாத பகுதி நேர ஆசிரியர்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்ட நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் மத்திய அரசின் திட்டத்தில் பணி செய்து வரும் நிலையில் இவர்கள் எப்படி மே மாதம் ஊதியம் பெற முடியும் என்று கல்வியாளர்கள் மத்தியில் பேசப் படுகின்றன

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய அய்யா அவர்களே தாங்கள் கூறியதற்கான அரசாணை எண் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும் அல்லது அரசாணையை பதிவிடவும்

      Delete
    2. ஐயா எவர் மீதும் தெரிந்தோ தெரியாமலோ முழு விவரம் தெரியாமல் கருதி பதிவிட்டு உள்ளீர்கள் என் கருத்தில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்

      Delete
    3. Paramu sir S.A.R oru dupakoor NEGA G.O ketigala paruga ine comments poda varamata avata oru detailsum illa.summa vailaye vada suduva.

      Delete
    4. Ada kumutai part time teachars oru veliyum seiyama padichu pass pannama vettiya engaloda vari panam vangitu ... summavay irrudhutu nee G.O ketkara ungala ellarukum Oru Exam vaika veandum appo theriyum neega oru Poli nu..

      Delete
    5. Sari exam vaikatum but yegaluku matum vaikatum no problem

      Delete
    6. Adhey pola naga work panala nu gov soilatum thanda sorru nee soiladha

      Delete
    7. Ada kumutai ungaluku mattum Exam vatcha eppudi best teachar select panna mudiyum....talent irrudha exam nee pass pannu...but evalavu kalam work panniyadhuku perioty mark kidika valipanalam..kumutai solurdhu paru avangalukula mattum Exam vaikutum nu solludhu....ippudi solum podhu siripu tha varudhu neeyalam permenet job ku ashai padura( thanippatta karuthu yar manathaiyum punpadutha villai)

      Delete
    8. மதிப்பிற்குரிய மேலே கூமுட்டை என்று அழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வணக்கம். ஒரு கத்தரி செடியிலிருந்து வரும் அனைத்து கத்தரிக்காய் நல்ல கத்திரிக்காய் ஆக இருக்க வாய்ப்பு இல்லை ஏதேனும் ஒரு கத்திரிக்காய் குறை இருக்கத்தான் செய்யும். அதே போல யாரோ ஒரு சிலர் மீது இருக்கக்கூடிய குறைகளை கொண்டு அனைத்து ஆசிரியர்களையும் மதிப்பிடுவது தவறு. நூற்றுக்கு 99 பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களே அனைத்து அலுவலகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடையே அனைத்துப் பொறுப்புகளும் நம்பிக்கையுடன் படைக்கப்படுகிறது. இன்று மிக முக்கியமாக கருதப்படும் பொதுத் தேர்வுக்காக நுழைவுச்சீட்டு தயார் செய்தல் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்தல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்தல் பொன்ற அரசினுடைய நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதும் அதை இணையதளத்தில் பதிவேற்ற முழு உதவியையும் பதிவேற்றம் செய்தும் பல்வேறு பகுதிநேரஆசிரியர்கள் செய்து வருகின்றனர். இன்று இருக்கக்கூடிய பல்வேறு பள்ளிகளில் அலுவலக பணியாளர்கள் சம்பளத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் நாங்கள் செல்லக்கூடிய மூன்று அரை நாட்களில் மாணவர் உடைய விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்தல் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் விலையில்லா நலத்திட்டங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் மாவட்ட கல்வி அலுவலகம் செல்லுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் செல்லுதல் பல்வேறு போட்டிகளுக்கு மாணவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லுதல் போன்ற பல்வேறு பணிகளை பகுதிநேர ஆசிரியர்கள் மேற்கொண்டு கொண்டிருக்கிறோம். யாரையுமே தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது குற்றம் சுமத்தாதீர்கள்

      Delete
    9. மேற்காண் தகவல்களில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது கருத்து தவறாக தெரிவித்து இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் இதை தற்காலிக ஆசிரியர் நிரந்தர ஆசிரியர்கள் மீது தவறாக எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கா மேற்கூறியவை நான் சொன்னவை

      Delete
    10. நீங்க சொல்றதெல்லாம் பார்க்கும்போது ஆசிரியர் வேலை பார்க்கவில்லை எடுபிடி வேலை மட்டும் தான் பார்த்து இருக்கிறீர்கள்... எல்லாம் அரசாங்க கையில்தான் உள்ளது உங்களுக்கு ஒன்று நல்லது நடந்தால் சந்தோசமே பார்ப்போம் தேர்வு வைத்து எடுத்தால் நல்லா இருக்கும்...

      Delete
  3. Neenga manusantha ella yenna jenmam unga vayettru yerichal poramai ungal pathivil therikirathu aduthavangala kasta paduthava un aatha appan unna pethu pottan neyellam mannathinkum puzhuvai vida kevalamana keduketta jenmam neeyelam pathividura entha aatchiela permananet pannavendam yeppothavathu permananet pannuvanga appa ne yenna moonvhi vachukkittu pathividuva na....ya

    ReplyDelete
    Replies
    1. ஜாக் நீக எ ippudi கெட்ட வார்த்தை use pandringa Oru teacher a irrudhutu ippudi pesardhu thappu kevalama irruku..yar Enna சொன்னாலும் என்ன ...எண்ணம் போல் வழக்கை...

      Delete
  4. S.A.R ne nalla oru thaiekku poranthitrunthal anaithu part time teacherkita nera eppadi pesa mudiuma po....ta

    ReplyDelete
    Replies
    1. Frd a solura jack ...avar sonndhu vida neega pesardhu tha romba kevalama irruku ..yaru enna sonna ungaluku enna unga work mattum parunga ippa neega avanga family pathi pesunga ava unga wife and mother pathi thappa pesuga Y ippudi oru comment toomuch

      Delete
    2. Neenga solrathuthan unmai, yarum yarayum pesa vendam

      Delete
  5. எவ்வளவோ அரசிடம் கேட்டுப் பெற வேண்டியுள்ளது. தகுதித் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு, முதுகலை ஆசிரியர் தேர்வு, சீனியாரிட்டி முறையை நிறுத்திவிட்டு தகுதியான அனுபவம் வாய்ந்தவர்களை தற்போது தேர்ச்சி பெற்று வருவோரிடம் ஓடச் செய்து தேர்வு செய்வது என்று பல்வேறு வயிற்றிலடிக்கும் சம்பவங்கள் உள்ளன. பணியிடங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு தேர்வு செய்யும் முறைகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. நல்ல முறையில் தேர்வு செய்வதை நிறுத்திவிட்டு மாற்றும்போது வழக்கு என்று செல்லும்போக்கு தற்போது அதிகமாகிறது. இப்படி இருக்கையில் வயதான நிலையில் ஏதோ வேலை கிடைத்துள்ளதே என்று கால்வயிறு நிறைவதற்கு வழியில்லாத சம்பளத்தில் வேலை பார்ப்பவர்களை ஏளனம் செய்ய ஒரு சிலர் இங்கு பதிவிடுகின்றனர். முதலில் உங்களுக்காக என்ன வேண்டும் என்று அரசிடம் கேளுங்கள். இல்லாவிட்டால் 60 வயது வரை இப்படி வயிறெரிந்தே போக வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. என்ன வெங்காயத்துக்கு அப்புறம் வேலைக்கு போற... அரசாங்க இடமொன்று கேளுங்கள் தேர்வு வையுங்கள் எங்களைப் போன்று மற்றவர்களும் தேர்வு எழுதவும் அதில் எங்க மாதிரி பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்னுரை மட்டும் கொடுங்கள் ... தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முழுநேர ஆசிரியராக மாற்றுங்கள்....(நீங்க உயிரே போனாலும் தேர்வு எழுத சம்மதம் தர மாட்டீர்கள் ஏனென்றால் சும்மாவே இருந்து அறிவு மங்கி விட்டது இறுதிவரை வெயிட் பண்ணி கொண்டே இருங்கள்ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதியத்திற்கு போராடுங்கள் கடைசிவரை எதுவும் கிடைக்காது)
      ,,,🤧🤧🤧🤧🤧🤧🤧🤧😋😉🙃😃😉🤣🤣😊🤒😂😂😂🤣😃😄😊

      Delete
    2. உடனே பக்கம் பக்கமா சொல்லிட வேண்டியது பகுதிநேர ஆசிரியர்கள் சொல்லவேண்டியது என்னவென்றால் உங்கள் வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள்... கெஞ்சிக் கொண்டே இருக்காதீர்கள்

      Delete
  6. நாங்க உன்கிட்ட கேட்கவில்லையே. அரசிடம் கேட்கிறோம். நீ உனக்கு என்னவேண்டுமோ அதை அரசிடம் கேள். அதை விட்டுவிட்டு எந்த வெங்காயக் கேள்வியும் எங்களைக் கேட்காதே!. தேர்விற்கும் நாங்கள் தயாராகதான் இருக்கோம். அரசே அந்த முடிவுக்கு வரவில்லையே. நீ யார் எங்களைப் பார்த்து கேட்பதற்கு? முதலில் உனக்கு வேண்டியதை நீ அரசிற்கு கொண்டு செல். எங்களுக்கு கொடுக்கப்பட்டதில் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் இந்த நேரத்திலும் எங்களுடைய பணியை சிறப்பாக நடத்தி பல்வேறு பள்ளிகளை நல்ல நிலைக்கு உயர்த்தி வருகிறோம். பல்வேறு வேலைகளை சிறப்பாக செய்கிறோம். நாங்கள் அரசிற்கு கோரிக்கை வைக்கிறோம். பள்ளிகளில் சென்று விசாரிக்கச் சொல். தகுதி இருக்கிறதா இல்லையா என்று. சென்ற ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு எதற்காக செய்யப்பட்டது என்பது தெரியுமா? தெரியாதா? இதில் போலி ஆசிரியர்கள் எப்படி தொடரமுடியும்?

    ReplyDelete
  7. Semmmmma comedy nalla adichukonga ...part time teachar pathi news poata comment alludhu

    ReplyDelete
  8. Part time teacher naa kidiydhu but ..avanga 9 years irrukanga romba kastathula irrukanga myfrd Part time teachar a work pandra.mrg agi two child irruku ...avanga padura kastam nalla puriyudhu idhanala sandai tha varudhu avangaluku govt job permenet pannina santhosham avanga kastam mathavangalukum purikirdhu i support PTT

    ReplyDelete
  9. School education la unmaiyga ulikum o department la onnu PTT(thanipata karuthu)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி