உங்ககிட்ட வாட்ஸ்அப் இருக்கா...? இனி வங்கி சேவைகள் வீட்டுக்கே வரும்! - kalviseithi

Aug 22, 2020

உங்ககிட்ட வாட்ஸ்அப் இருக்கா...? இனி வங்கி சேவைகள் வீட்டுக்கே வரும்!

வாட்ஸ் அப் மூலம் வங்கி சேவைகள் இனி வீட்டிற்கே வரும் என்ற நற்செய்தி வெளியாகியுள்ளது.


இந்த சேவையை வழங்க இருப்பது எஸ்பிஐ வங்கி. அதாவது பணம் எடுக்க ஏடிஎம் மையத்தை தேடிப்போகும் காலம் போய், உங்க வீட்டு வாசலுக்கே ஏடிஎம் எந்திரம் இருக்கும் வாகனம் வர இருக்கிறது. அதன்படி "உங்க வீட்டு வாசலில் ஏடிம்" என்ற சேவையை ஸ்டேப் பாங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் வங்கியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினால் போதும். அடுத்த சில நிமிடங்களில் நடமாடும் ஏடிஎம் வாகனம் உங்க வீட்டுக்கு வந்துவிடும். இந்த சேவை தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்த சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி