கல்லூரிகளில் ஆல் பாஸ் அறிவிப்பு ‘அரியர் மாணவர்களின் அரசனே’ பிளக்ஸ் போர்டு வைத்து பாராட்டு - kalviseithi

Aug 28, 2020

கல்லூரிகளில் ஆல் பாஸ் அறிவிப்பு ‘அரியர் மாணவர்களின் அரசனே’ பிளக்ஸ் போர்டு வைத்து பாராட்டு


தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில், அரியர் வைத்த மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவருமே பாஸ் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று முன்தினம் அறிவித்தார். 


இந்நிலையில், ஈரோடு கொல்லம்பாளையம் ரவுண்டானா அருகே செல்லும் ரோட்டில், அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘அரியர்-மாணவர்களின் அரசனே, எடப்பாடியாரே, நீர் வாழ்க, வாழ்க’ என்றும், ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ என்ற திருக்குறளையும் பதிவிட்டுள்ளனர். இந்த பேனர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2 comments:

  1. தற்பொழுது தேர்ச்சி என அறிவித்து விடுவார்கள் ஆனால் தேர்தல் முடிந்தவுடன் நீட் போல ஏதாவது ஒரு நுழைவு தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றால்தான் டிகிரி செல்லும் என அறிவித்து விடுவார்கள் இவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்

    ReplyDelete
  2. கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி