அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் இணைய வழி வகுப்புகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2020

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் இணைய வழி வகுப்புகள்


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் இணைய வழி மூலமாக வகுப்புகள் நடைபெறும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் 2020- 21ம் ஆண்டுக்கான விண்ணப்ப விற்பனையை துணைவேந்தர் முருகேசன் கலந்துகொண்டு துவக்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, இந்த வருடம் தொலைதூரக்கல்வி மையத்தில் முதுநிலை பட்டப்படிப்புகள் 65, இளநிலை பட்டப்படிப்புகள் 66, முதுநிலை பட்டயப் படிப்புகள் 52 உட்பட மொத்தம் 242 பாடப்பிரிவுகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு மானியக் குழுவால் அறிவிக்கப்பட்ட தகவலின்படி ஐந்து பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. புதிதாக மூன்று பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.

இந்த ஆண்டின் கொரோனா வைரஸ் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தொலைதூரக் கல்வி இயக்கத்தின் மூலம் பாடப் பிரிவுகள் அனைத்தும் இணையதளத்தின் வழியாக நடத்தப்படுகின்றன. இந்தக் கல்வி ஆண்டு சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்வி ஆண்டு முடிந்தவுடன் மூன்று வருடங்களுக்குள் பிராஜக்ட் முடித்துவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களின் பதிவு எண் தானாக நீக்கப்பட்டு விடும். அதன் பிறகு மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர வேண்டுமென்றால் புதிதாகச் சேர்ந்து பயில வேண்டும் என துணைவேந்தர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி