DSE - கல்வித் தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து தயாரித்த 297 காணொளிகள் ( Video lessons ) பட்டியல் பள்ளிக் கல்வித்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2020

DSE - கல்வித் தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து தயாரித்த 297 காணொளிகள் ( Video lessons ) பட்டியல் பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.


அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளை ( SOP ) பின்பற்றி வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின் காரணமாக மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க , தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் வீட்டுப்பள்ளி திட்டத்தின்கீழ் , 12 ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு முதல் கட்டமாக 136 காணொளிகள் Hi - Tech lab மூலம் இணையதளம் வழியே அவர்களின் பாடம் சார்ந்த காணொளிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டது. மாணவர்கள் தங்கள் மடிக்கணினி மூலம் பாடங்களை ஆசிரியர்கள் உதவியுடன் கற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , கல்வித் தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து தயாரித்த 297 காணொளிகள் ( Video lessons ) தயார் நிலையில் உள்ளது. காணொளிகள் எண்ணிக்கை பாடம் வாரியாக கீழ்காணும் அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளது.

297 Video lessons List - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி