Flash News : ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் E-PASS வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2020

Flash News : ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் E-PASS வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு.


ஆகஸ்ட் 17 முதல் ஆதார் அட்டை / குடும்ப அட்டை மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் உடனுக்குடன் E-PASS வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.


தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்குமாறு முதல்வர் அறிவிப்பு.

பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ( மாவட்டங்களுக்கு இடையே ) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் , E - Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன் , விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் . பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை , அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் , தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் E - Pass க்கு விண்ணப்பம் செய்து , E - Pass பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும் , அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

5 comments:

  1. Freedom bumper price ellorum odungoooo!

    ReplyDelete
  2. மிக நல்ல செய்தி. வாழ்க முதல்வர்.

    ReplyDelete
  3. நல்ல தகவல்.

    ReplyDelete
  4. நல்ல தகவல்.

    ReplyDelete
  5. பகுதி நேர ஆசிரியர்களை இதுவரை கண்ணுக்குத் தெரியவில்லை. 100 ரூபாய் கூட சம்பளம் ஏற்ற மனம் வரவில்லை. இவர்களது ஆட்சியில் இவர்களால் இப்படி ஒரு மோசமான பணியிடங்களை ஏற்படுத்தி 16000 குடும்பங்களை பிச்சை எடுக்க வைக்கும் நிலையை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு எந்த வித பணிப்பாதுகாப்பும் கிடையாது. இறப்பு ஏற்பட்டால் கூட கண்டுகொள்ளவும் நாதி இல்லை. இப்படிப்பட்ட சூழலில் கொரோனா மையங்களில் பணியாற்ற புதுக்கோட்டை மாவட்டத்தில் உத்தரவு. இது எந்த விதத்தில் நியாயம் என்று மனசாட்சி உள்ளவர்கள் நினைத்துப் பாருங்கள். இவர்களது குடும்பத்திற்கு என்ன செய்வீர்கள் என்று நினைத்துப்பார்த்து பணியமர்த்துங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி