இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) சார்பாக இன்று CEO அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம். - kalviseithi

Aug 5, 2020

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) சார்பாக இன்று CEO அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.


🛡️STFI சார்பாக 05.08.2020 இன்று நடைபெறும் மாலை நேர  ஆர்ப்பாட்டம் -  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அன்போடு அழைக்கிறது.

பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி STFI சார்பாக 05.08.2020 இன்று நடைபெறும் மாலை நேர  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் போர்குணம் கொண்ட பேரிக்கத்தின் இயக்க மறவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

⚡இடம்: CEO அலுவலகம் முன்பு, (அந்தந்த மாவட்டம்)

⚡நாள்: 05.08.2020 புதன்கிழமை

⚡நேரம்: மாலை 4.30 மணி

3 அம்ச கோரிக்கைகள்

2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் இறுதிவரை களத்தில் நின்ற போராளிகள் மீது எடுக்கப்பட்ட 17 B நடவடிக்கையை திரும்பப்பெற வலியுறுத்துதல்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கருத்து தெரிவித்த திரு.மா.இரவிச்சந்திரன் மற்றும் திரு பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட 17 B. நடவடிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்துதல்.

மருத்துவ குழுவினரின் ஆலோசனை பெற்று பள்ளி, கல்லூரிகளைத் திறந்து சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துதல்.

ஆகிய முத்தான மூன்று  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) சார்பாக இன்று (05.08.2020) புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தமிழகம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் TNPTF இயக்கப் பொறுப்பாளர்களும் இயக்க மறவர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாறும், ஆர்பாட்டத்தில் இயக்க தோழர்கள் மற்றும் தோழமைச் சங்க தோழர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறும்  அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🗣️கோரிக்கை முழக்க ஆர்பாட்ட கோஷங்கள் இணைக்கப்பட்டுள்ளது தேவைபடும் தோழர்கள் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Thanks To : TNPTF 

2 comments:

  1. கோரிக்கை மூன்று முதலாவது இருந்து இருக்க வேண்டும். தங்கள் பணி பற்று மற்றும் உயர் நோக்கம் தெளிவாக தெரிகிறது. வேலை பார்க்க வேண்டும் என்று நினையுங்கள்

    ReplyDelete
  2. ஏற்கனவே போராட்டம் நடத்தினீர்களே.. அந்த கோரிக்கைகளெல்லாம் நிறைவேறிவிட்டதா??


    அரசு ஊழியர்களுக்கான அனைத்து சங்கங்களையும் தடை செய்தாலே போதும்.. நிர்வாகம் சிறப்பாகும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி