இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும்: அமைச்சர் அன்பழகன் - kalviseithi

Sep 1, 2020

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும்: அமைச்சர் அன்பழகன்


கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். விரிவான தேர்வு அட்டவணை, தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறினார். இறுதி ஆண்டு தேர்வுகளை மாணவர்கள் நேரில் வந்து எழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். மேலும் B.Arch படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் தகவல்களுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தை மாணவர்கள் அணுகலாம் என அறிவித்தார். 


மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா காரணமாக இறுதி ஆண்டு பருவத் தேர்வை தவிர மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அரியர் எழுத இருந்த மாணவர்களையும் அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2 comments:

  1. உயர் கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளில் 80 % ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. இந்நிலையில் புதிதாக 10 கல்லூரிகள் பெயரளவுக்கே திறந்துள்ளனர்.அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது ஆனால் போதுமான ஆசிரியர்கள் இல்லை.எனவே ஆசிரியர்களை உடனே ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் .

    ReplyDelete
  2. உயர் கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளில் 80 % ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. இந்நிலையில் புதிதாக 10 கல்லூரிகள் பெயரளவுக்கே திறந்துள்ளனர்.அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது ஆனால் போதுமான ஆசிரியர்கள் இல்லை.எனவே ஆசிரியர்களை உடனே ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி