அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2020

அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்!

 


நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம்  மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர்.

 மாணவர் சேர்க்கை நாளை மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் குழந்தைகளை சேர்க்காத பெற்றோர்கள், நாளை பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

9 comments:

 1. TET 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது B.Ed சீனியாரிட்டி அடிப்படையில் சீக்கிரமாக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. அரசு பள்ளியில் 23817 ஆசிரியர்கள்
   உபரியாக உள்ளனர்

   Delete
 2. Part time teachers ku help panuga

  ReplyDelete
 3. பொய்...

  6,9,11 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் ஏற்கனவே அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் தான்.


  என்னவொரு பித்தலாட்டம்...


  7 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து அரசுப் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளனர்.
  ஆனால் 3 லட்சம் பேர்தான் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்றனர்.

  ஆக இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் 4 லட்சம் மாணவர்கள் குறைவு.

  ReplyDelete
 4. அரசு பள்ளியில் 23817 ஆசிரியர்கள்
  உபரியாக உள்ளனர்

  ReplyDelete
  Replies
  1. ஐய்யோ அமைச்சரவது 7500 உபரி சொன்னார்
   இது யாரு புது அமைச்சரோ

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி