அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - ஸ்டாலின் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2020

அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - ஸ்டாலின்

 

அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 50 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை அமைச்சர் முடிவு செய்வார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.


பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களின் பேட்டிகள் பெற்றோர்களை குழப்பியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை அதிமுக அரசு விளையாட்டாக நினைத்து செயல்படுகிறதோ என்று அச்சம் ஏற்படுகிறது. மாணவர்களை வீட்டில் கடிதம் வாங்கி வர சொல்வது பழியை பெற்றோர் தலையில் போட உள்நோக்கம் உள்ளது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


பள்ளிகள் திறக்கும் அரசாணை எந்த ஆலோசனையும் இன்றி வெளியிடப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஆன்லைன் மூலம் சந்தேகங்களை கேட்கலாம் என கூறிவிட்டு அவசரகதியில் பள்ளிகளை திறப்பது புரியாத புதிராக உள்ளது. கொரோனா அதிகரிக்கும் நேரத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் பதற்றத்தில் இருக்க முடியாது. பெற்றோரிடம் கடிதம் பெற்றுவிட்டோம் என்று அலட்சியம் காட்டாமல் மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி