தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: செப்.28ல் பள்ளி கல்வி துறை ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: செப்.28ல் பள்ளி கல்வி துறை ஆலோசனை

 


தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம் கோபியில், நேற்று அவர் அளித்த பேட்டி,


தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழக புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளது. தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் தொடர்பாக வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


தமிழகத்தில் இதுவரை ஒன்று முதல் பிளஸ் 2 வரை 15:30 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்க்கையாகி உள்ளனர். செப்டம்பர் இறுதி வரை தொடர்ந்த மாணவர் சேர்க்கை நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகள் திறப்பு: செப்.28ல் ஆலோசனை


ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளிகள், இன்னும் திறக்கப்படவில்லை. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்துள்ளதால், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து, வரும், 28ம் தேதி கருத்து கேட்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. 

அன்று பிற்பகலில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடக்கும் கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும்படி, தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

2 comments:

  1. அக்டொபர் 5ம் தேதி பள்ளிகள் திறப்பு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி