பள்ளிகளில் 30 முதல் 40% பாடத்திட்டத்தை குறைக்க நிபுணர் குழு பரிந்துரை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2020

பள்ளிகளில் 30 முதல் 40% பாடத்திட்டத்தை குறைக்க நிபுணர் குழு பரிந்துரை?


கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் பாதிப்பை கண்டறிய 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு, நிபுணர்களின் பரிந்துரை கோரப்பட்டது.


அந்த குழுவின் முதற்கட்ட பரிந்துரை கடந்த ஜூலை மாதம் அரசிடம் சமர்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தற்போது 2ஆம் கட்ட பரிந்துரையையும் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது குறித்து பேசிய கல்வித்துறை அதிகாரிகள், குறுகிய காலத்தில் மொத்த பாடத்திட்டத்தை முடிக்க முடியாது என்பதால், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30% பாடத்திட்டத்தை குறைக்கவும் பிற வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டத்தை குறைக்கவும், மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க திருப்புதல் தேர்வுகளை மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் நிபுணர் குழு பரிந்துரையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்னர்.


2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி