30 ஆண்டுகள் பணி அல்லது 50 வயதில் ஓய்வு - கணக்கெடுக்கும் பணி தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2020

30 ஆண்டுகள் பணி அல்லது 50 வயதில் ஓய்வு - கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.



மத்திய அரசு ஊழியர்கள் 30 ஆண்டுகள் பணிபுரிந்தால் அல்லது வயது 50 ஐ தாண்டி விட்டால் ஓய்வில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கணக்கெ டுப்பு நடக்கிறது. மத்திய அரசின் செயல்பாடுகளில் திறமை மற்றும் வேகத்தை காட்டும் வகையில் புதிய களை எடுப்பில் பணியாளர் நலத்துறை இறங்கி உள்ளது. அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வு பெற வைக்கும் வகையில் புதிய நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி புதிய பதிவேடு முறை உருவாக்கப்படுகிறது. 50 / 55 வயதை அடைகிறவர்கள் அல்லது 30 ஆண்டு கள் பணி முடித்தவர்களின் பணிப்பதிவேடுகள் ஆய்வு செய்யப்படும் . நேர்மையின்றி செயல்படுவதாக அல்லது திறமையற்று இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு பணிஓய்வு கொடுக்கப்படும். ஒவ்வொரு காலாண்டிலும் மூத்த அதிகாரி ஆய்வு செய்து , பணியில் இருந்து ஓய்வு பெறச் செய்ய பரிந்துரைப்பர் . அதன்படி அவர்களுக்கு பணி ஓய்வு உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கும் . இது கட்டாய ஓய்வு அல்ல . பொது நலன் கருதி எடுக்கப்படும் முடிவு என்று பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது . இதையடுத்து 30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் மற்றும் 50 வயதை தாண்டியவர்கள் பற்றி கணக்கெடுக் கும்ப ணி துவங்கி உள்ளது.

20 comments:

  1. தமிழ்நாட்டில் 50 வயது கடந்த ஆசிரியர்களை உடனடியாக பணிநீக்கம்
    செய்துவிட்டு TET தேர்ச்சி பெற்ற 50 வயது கீழ் உள்ளவர்களை நியமிக்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இப்போது 49 வயதுன்னு வச்சிப்போம் உங்களுக்கு வேலைய கொடுத்து அடுத்த ஆண்டு வீட்டுக்கு அனுப்பிடலாமா?

      Delete
  2. தமிழ்நாட்டில் 50 வயது கடந்த ஆசிரியர்களை உடனடியாக பணிநீக்கம்
    செய்துவிட்டு TET தேர்ச்சி பெற்ற 50 வயது கீழ் உள்ளவர்களை நியமிக்கவேண்டும்

    ReplyDelete
  3. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் செய்ய
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
    முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
    பணிவழங்க வேண்டும்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
    மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

    பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

    TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
    தேர்ச்சிபெற்றவர்களை
    நியமித்து
    அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Toilet kaZhuvura vela irukku...Tet pass pannunuvangala podalam

      Delete
    2. சிறந்த முறையில் சுத்தமாக டாய்லெட் எப்படி கழுவுவது என்றும் நாங்கள் சொல்லிக்கொடுப்போம், எந்த தொழிலையும் இழிவென எண்ணவேண்டாம்.

      Delete
  4. Admin sir intha TET team i lock pannunka imsaiya irukku. Ivanka than periya aaluka mari mathavan pooram muttal en pesuranka. Etha eduthalum TET thana

    ReplyDelete
    Replies
    1. Sss athisayama ivanga than Tet pass panni sathanai pannina mari pathu pakkathuku eluthi pathu thadavai ovvoru news layum pottu tourcher pandranga

      Delete
    2. If you're not intrested just skip it.why do you read it and blame us. Just think about the fate of 80000 who cleared TET.It may also include your friends and relatives. Be humane.

      Delete
    3. தமிழகத்தில் எல்லா பள்ளிகளையும். அரசு பள்ளிகளாக மாற்றினால் TET முடித்த அனைவருக்கும் வேலை கிடைக்கும். அதற்கு முயற்சிப்போமே...

      Delete
  5. TET is a Teacher Eligible Test only many of them cleared recruitment exam and silently waiting for their turn so wait or dont comment in all topics which one is not relevent in TET Post..

    ReplyDelete
  6. Tamil Nadu government entha sattam kondu Vara vendum. Tntet exam cancel pannuga.

    ReplyDelete
  7. மற்றவர்கள் வேலையை ஏன் பறிக்க நினைக்கின்றீர்கள்.

    ReplyDelete
  8. *கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*


    *நாள்: 05/09/2020*

    *இடம்: காளைமாடு சிலை அருகே ஈரோடு*

    *நேரம்:காலை9:30*

    *ஆளும் அரசை கண்டித்து ஆசிரியர் தினத்தன்று ஈரோடு மாவட்டம் காளைமாடு சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது*

    *நமது சங்கத்தால் திட்டமிடபட்டுள்ள இந்த ஆர்பாட்டத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த நண்பர்கள் அதிக அளவில் காணவேண்டும் என்பதை தெரிவித்து க்கொள்கிறோம்.*

    *ஈரோட்டிற்கு வர உள்ள நண்பர்கள் வாட்ஸ் அப்பில் உங்கள் பெயரை பதிவிடவும்*

    *திரு. தினேஷ்*
    *99429 19875*

    *2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்*

    ReplyDelete
    Replies

    1. September 4, 2020 at 4:22 PM
      தமிழகத்தில் எல்லா பள்ளிகளையும். அரசு பள்ளிகளாக மாற்றினால் TET முடித்த அனைவருக்கும் வேலை கிடைக்கும். அதற்கு முயற்சிப்போமே..

      Delete
  9. இதென்னப்பா எப்பபாரு டெட் பாசானவங்க ஒரு ஒரு டீமா சண்டபோட ஆரம்பிச்சிடுரீங்க டெட் பெயிலானவங்க எல்லாம் அறிவே இல்லாதவங்களா இல்ல அரசு அறிவிச்சமாதிரி வருஷத்துக்கு இரண்டு எக்ஸாம் வச்சாங்களா இல்ல கேள்வி முறைதான் சரியா தாவரவியல் விலங்கியலில் கேட்ட கேள்வி எத்தனைனு நம்ம எல்லாருக்கும் தெரியுமா ஒரு அறிவியல் ஆசிரியருக்கு கணிதம் 30 ஆங்கிலம் 30 அவன் படிச்ச மேஜர் வரும் 7 கேள்வி முட்டாப்பசங்க ஆட்சியில் இது சாத்தியம்னு வயிரெரியரப்ப நீங்க எப்பாடு எரிச்சல கெலப்பிட்டிருக்கீங்க...

    ReplyDelete
  10. Government job la 30 years complete pannavanga than releave pannuvanga
    Suppose one person 45 age la job vanthana avanga 59 age varaikum job la work pannalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி